19 சீன, இலங்கை ஜோடி­க­ளுக்கு சீனக் கலாசார மரபு உடையில் திரு­மணம்.


சீனா மற்றும் இலங்­கையைச் சேர்ந்த 19 தம்­ப­திகள் நீர்­கொ­ழும்பில் உள்ள ஆடம்­பர விடு­தியில்
வியா­ழக்­கி­ழமை பெரி­ய­ளவில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிகழ்வில் திரு­மணம் செய்து கொண்­டனர்.

12 சீனத் தம்­ப­தி­யி­னரும், 7 இலங்கை தம்­ப­தி­யி­ன­ருக்­குமே திரு­மணம் செய்து வைக்­கப்­பட்­டது.

இவர்கள் அனை­வரும், இலங்­கையில் கட்­டு­மானப் பணியில் ஈடு­பட்­டுள்ள சீனாவின் அரச கட்­டு­மான பொறி­யியல் நிறு­வ­னத்தின் பணி­யா­ளர்­க­ளாவர்.

‘அணை மற்றும் பாதை திட்­டத்­துக்­காக ஒன்றுகூடி­யுள்ளோம், நாங்கள் இலங்­கையில் திரு­மணம் செய்தோம்’ என்ற தொனிப்பொருளில் இந்தப் பிர­மாண்ட திரு­மண நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

கொழும்பில் உள்ள சீனத் தூத­ரக அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அதி­காரி பாங் சுன்சூ உள்­ளிட்ட முக்­கிய பிர­மு­கர்கள் மற்றும் 300 விருந்­தி­னர்கள் இந்தத் திரு­மண நிகழ்வில் பங்­கேற்­றனர்.

இந்தப் புதிய திரு­ம­ணங்கள் மூலம், சீன–- இலங்கை ஒத்­து­ழைப்பு எதிர்­கா­லத்தில் பிர­கா­ச­மா­கவும் செழிப்­பா­கவும் இருக்கும் என்று நம்­பு­வ­தாக சீனத் தூத­ரக அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான அதி­காரி சுன்சூ தெரி­வித்­துள்ளார்.

மணமக்கள் அனைவரும் சீனக் கலாசார மரபுகளுக்கு அமைய சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
19 சீன, இலங்கை ஜோடி­க­ளுக்கு சீனக் கலாசார மரபு உடையில் திரு­மணம். 19 சீன, இலங்கை ஜோடி­க­ளுக்கு  சீனக் கலாசார மரபு உடையில்  திரு­மணம். Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.