150 பேரிடம் 8 கோடி ரூபா அபேஸ் பண்ணிய பௌத்த தேரர் இறுதியில் சிக்கினார். கோடிக்கணக்கான பணமும் நகையும் மீட்பு.



கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட
பௌத்த தேரரை பொலிஸார்
தேடி வந்த நிலையில் அவர் கைதாகி உள்ளார்.

சிலாபம் - மாரவில பகுதியில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட தேரரிடமிருந்து சுமார் 8 கோடி பணமும், தங்க ஆபரண தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள பல மக்களிடம் கோடிக் கணக்கில் பணம் மோசடி செய்த அஸுன்கல்ல விகாரையின் தோரே மோசடி யில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக இந்தத் தேரர் விகாரையில் இருந்து காணாமல் போனார்.

அஹுன்கல்ல, கல்வேஹேர மவலுவ வத்தை விகாரையில் பணியாற்றும் இந்தத் தேரர், தான் கனடாவில் உள்ள பல்கலைக்க முகத்தில் பேராசிரியராக செயற்படுவதாகக்குறிப்பிட்டு பிரதேச மக்களை ஏமாற்றியுள்ளார்.

விகாரைக்கு வருபவர்களின் மனதை மிகவும் நுட்பமான முறையில் மாற்றி ஏமாற்றியுள்ளார்.

அஜுன்கல்ல, பதுனை, வெல்லவாய,
பண்டாரவ ல, கினிகத்ஹே ன, அவிசாவளை, வெலிகம, கித்துல்கம, கண்டி, பல்லேகலை பிரதேசத்தைச் சேர்ந்த 150 பேரை ஏமாற்றி 8 கோடி ரூபா பணம் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்,



இந்த நிலையில் திடீரென காணாமல்
போன தேரரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் மாரவில பகுதியில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
150 பேரிடம் 8 கோடி ரூபா அபேஸ் பண்ணிய பௌத்த தேரர் இறுதியில் சிக்கினார். கோடிக்கணக்கான பணமும் நகையும் மீட்பு.  150 பேரிடம் 8 கோடி ரூபா அபேஸ் பண்ணிய பௌத்த தேரர் இறுதியில் சிக்கினார். கோடிக்கணக்கான பணமும் நகையும் மீட்பு. Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.