திருமண நிகழ்வுக்காக மத்ரஸா மாணவர்களை அழைத்து சென்ற வேன் விபத்து! மாணவர்கள் உயிராபத்தில்.வெள்ளவத்தை ஜாமியா இஸ்லாமியா மத்ரஸா மாணவர்கள் வேன் ஒன்றில் பேருவளை, மக்கொனை
கல்யாண மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு திரும்பி கொண்டிருக்கும் வேளை மக்கொனை பகுதியில் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

நேற்றிரவு 9:45 மணியளவில் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த நான்கு மாணவர்கள் களுத்துறை வைத்தியசாலையிலும் 3 மாணவர்கள் கொழும்பு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் அஷ்ஷேஹ் அப்துல் ஹாலிக் மெளலவி அவர்களின் புதல்வர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.
திருமண நிகழ்வுக்காக மத்ரஸா மாணவர்களை அழைத்து சென்ற வேன் விபத்து! மாணவர்கள் உயிராபத்தில். திருமண நிகழ்வுக்காக மத்ரஸா மாணவர்களை அழைத்து சென்ற வேன் விபத்து! மாணவர்கள் உயிராபத்தில். Reviewed by nafees on July 14, 2018 Rating: 5