ஆரம்பமானது கதிர்காம அசெல திருவிழா.. முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டனர்.


வரலாற்றுச் சிறப்பு மிக்க ருகுணு மகா கதிர்காம தேவாலயத்தின் அசெல திருவிழா நேற்று  (13) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அசெல திருவிழா ஆரம்பிக்க முன்னர் புனிதப் பிரதேசத்துக்குள் காணப்படும் முஸ்லிம் பள்ளிவாயலில் கொடியேற்ற விழாவும் இன்று நடைபெற்றுள்ளது.இந்த அசெல திருவிழா ஆரம்பிக்க முன்னர், பௌத்த, முஸ்லிம், இந்து மதங்களுக்குரிய மதத் தலைவர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் இணைந்து சம்பிரதாய நிகழ்வுகளில் ஈடுபடுவது வழமையாகும் எனவும் கூறப்படுகின்றது.


நாட்டிலுள்ள மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பிரதிபளிக்கும் வகையில் இந்த நிகழ்வு காணப்பட்டதாக சகோதார மொழி ஊடகங்கள் புகைப்படத்துடன் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.


உலகிலுள்ள ஒரேயொரு சர்வ மத கேந்திர நிலையமான கதிர்காம புனித பிரதேசத்தில், பௌத்தர்களுக்கும், இந்து மற்றும் இஸ்லாம் சமயங்களின் பக்தர்களுக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பமானது கதிர்காம அசெல திருவிழா.. முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டனர். ஆரம்பமானது  கதிர்காம அசெல திருவிழா.. முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டனர். Reviewed by Madawala News on July 14, 2018 Rating: 5