உதைபந்தாட்ட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இன்றைய அரையிறுதிப்போட்டி.


இங்கிலாந்து - குரோஷியா இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஏற்கெனவே பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில் இந்தப் போட்டி மாஸ்கோவில் உள்ள லூசினிகி ஸ்டேடியத்தில் ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே நடைபெறவுள்ளது.


பிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 நாடுகளின் அணிகள் லீக் போட்டிகளில் பங்கேற்றன. அதிலிருந்து 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. பின்பு, அதிலிருந்து 8 அணிகள் காலிறுதிப் போட்டியில் பங்கேற்றன. இப்போது நான்கு  அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றன. அரையிறுதியில் வெற்றிப்பெறும் இரு அணிகள் இதில் ஜூலை 15 ஆம் தேதி நடைபெவுள்ள இறுதிப் போட்டியில் மோதும்.

52 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் வெறியோடு உள்ள இங்கிலாந்து, மிகவும் வலுவான நடுகள வீரர்களை கொண்ட குரேஷியா என்ற மிகப் பெரிய தடுப்பை தாண்ட வேண்டிய நிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணியில் ஒரு காலத்தில் பெக்காம், ரூணி போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருந்தனர். அப்போதெல்லாம் அந்த அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடிந்ததில்லை. கடைசியாக 1966 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அதன் பின்னர் சோபிக்கவில்லை. 1990 ஆம் ஆண்டு ஓரே முறை அரையிறுதிக்கு முன்னேறி மேற்கு ஜெர்மனியிடம் தோல்வியைத் தழுவியது.



இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (6 கோல்), ஹாரி மேக்குயர், டெலி அலி, ஜோர்டான் ஹென்டர்சன், லிங்கார்ட் உள்ளிட்டோர் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றனர். குரோஷியா அணி உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. கடைசியாக 1998 உலக்க கோப்பை அரையிறுதியில் பிரான்ஸிடம் தோற்று 3-ஆம் இடத்தை  பெற்றது.

எனவே இம்முறை எப்படியேனும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட வேண்டும் என்ற வேட்கையுடன் களம் காண்கிறது. குரோஷிய அணியில் மொட்ரிக், மண்டுஸூகிக்  இருக்கின்றனர். முக்கியமாக கோல் கீப்பர் சுபாஸிக் இருக்கிறார், இவரை தாண்டி பந்து கோல் போஸ்ட்டுக்குள் செல்வது சிரமம். ஆனால் அவர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்பது சிரமம் எனக் கூறப்படுகிறது.

2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாடுகின்றன. தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வெல்ல உள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன.

அரை இறுதியில் விளையாடும் பிரான்ஸ் 1998ல் கோப்பையை வென்றது. இங்கிலாந்து 1966ல் கோப்பையை வென்றுள்ளது. மற்ற இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் உள்ளன. நேற்று இரவு நடந்த முதல் அரை இறுதியில் பிரான்ஸ் 1-0 என பெல்ஜியத்தை வென்றது. இன்று இரவு 11.30 மணிக்கு மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாவது அரை இறுதியில் இங்கிலாந்து, குரேஷியா மோத உள்ளன.

இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா அனைத்து ஆட்டங்களிலும் வென்றுள்ளது. லீக் சுற்றில் நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது. நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. காலிறுதியில் ரஷ்யாவை 4-3 என பெனால்டிஷூட்டில் வென்றது. நான்காவது முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ள குரேஷியா, 2வது முறையாக அரை இறுதியில் விளையாடுகிறது.
உதைபந்தாட்ட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இன்றைய அரையிறுதிப்போட்டி. உதைபந்தாட்ட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இன்றைய அரையிறுதிப்போட்டி. Reviewed by Madawala News on July 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.