JVP முன்மொழிந்துள்ள 20 ஆவது யாப்புத்திருத்தச்சட்டத்தில் அப்படி புதிதாக என்ன சொல்லபட்டுள்ளது தெரியுமா?



மக்கள் விடுதலை முன்னணியால் (JVP) முன்மொழியப்பட்டிருக்கும் 20 வது யாப்புத்திருத்தச்சட்ட மூலம்
வர்த்தமானியில் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டம் அது பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்படவேண்டும்.

JVP இந்த சட்டமூலத்தில் அப்படி எதைத்தான் புதிதாக சொல்லியிருக்கிறதென்று அனேகமானோருக்கு தெரியாமலிருக்கும்.

1. ஜனாதிபதி பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்படுவார் (தேர்தல் நடாத்தும் கோடிக்கான பணச்செலவு மீதமாகும்).

2. ஜனாதிபதி முப்படைகளின் தளபதியாக செயற்படுவார்

3. ஆளுனர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் இருக்கும்.

4. அமைச்சரவையின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் பிரதமரே இருப்பார் .

5. தண்டனை வழங்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவேண்டுமாக இருந்தால் அமைச்சரவையின் அனுமதியை பெறவேண்டும் ( மிகச்சிறந்த யோசனை)

6. ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில் அப்பதவியை வகிக்கின்ற ஒருவர் எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினராக கூட இருக்க முடியாது!



முன்யோசனையோ, பொதுப்புத்தியோ, தேசத்தை வளப்படுத்தும் எண்ணமோ வலு குறைவானதாக காணப்படும் ‘பெரும்பாலான’ அயோக்கியர்களால் நிரம்பி வழியும் இலங்கைப்பாராளுமன்றத்தில்...
20 வது திருத்தத்திற்கு 2/3 பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதென்பது குதிரைக்கொம்புதான்!


இந்த முன்மொழிவுகள் ஒரு வரலாற்று ஆவணமாக வேண்டுமென்றால் இருந்துவிட்டுப்போகும்.

ஜனாதிபதி எந்தக்கட்சியிலும் அங்கம் வகிக்கமுடியாதென்ற பண்புகளை கொண்ட சட்டங்களை இயற்றுமளவிற்கு நமது legislators உம் அவர்களை தெரிவு செய்கிற திருவாளர் பொதுஜனங்களும் பண்பட்டிருந்தால் இந்நேரம் நாமெல்லோரும் எங்கேயோ போயிருப்போம்.
- முஜீப் இப்ராஹீம் -
JVP முன்மொழிந்துள்ள 20 ஆவது யாப்புத்திருத்தச்சட்டத்தில் அப்படி புதிதாக என்ன சொல்லபட்டுள்ளது தெரியுமா? JVP முன்மொழிந்துள்ள 20 ஆவது யாப்புத்திருத்தச்சட்டத்தில் அப்படி  புதிதாக என்ன சொல்லபட்டுள்ளது தெரியுமா? Reviewed by Madawala News on July 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.