பெல்ஜியத்தை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது பிரான்ஸ்.


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடந்த  முதல் அரை இறுதியில் பிரான்ஸ், பெல்ஜியம்
அணிகள் மோதின..

இரு அணிகளும் நிதானமாக, எதிரணிக்கு வாய்ப்பு அளிக்காமல் விளையாடின. இரு அணிகளும் கோல் அடிக்காமல் முதல் பாதி 0-0 என முடிந்தது.

ஆட்டத்தின் 51வது கிரீஸ்மான் கடத்தி கொண்டு வந்து கொடுத்த பந்தை கோலாக்கினார் உம்டிடி. இதன் மூலம் 1-0 என பிரான்ஸ் முன்னிலை பெற்றதுடன் பெல்ஜியம் அணி எந்தவித கோலும் அடிக்காததை அடுத்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகி ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன.

கடந்த மாதம் 14ம் தேதி துவங்கி இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன.

முதல் சுற்று ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்களைத் தொடர்ந்து காலிறுதி ஆட்டங்களும் முடிந்துள்ளன.

தற்போது பிரான்ஸ் இறுதிப்போட்டிக்கு நுழைய,

நாளை  குரேஷியா, இங்கிலாந்து ஆகியவை  இறுதிபோட்டிக்காக மோதுகின்றன.


பெல்ஜியத்தை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது பிரான்ஸ். பெல்ஜியத்தை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது பிரான்ஸ். Reviewed by Madawala News on July 11, 2018 Rating: 5