இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனையுடன் இறுதிப்போட்டிக்கு தெரிவானது குரோஷியா... வாழ்த்துக்கள்..


ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.
மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, குரோஷியாவை எதிர் கொண்டது.

ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில், ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அதனை அருமையாக பயன்படுத்திய இங்கிலாந்தின் ட்ரிப்பர் அற்புதமாக கோல் அடிக்க இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

பின்னர் குரோஷியா வீரர்கள் எப்படியாவது கோல் அடித்து ஆட்டத்தை முதல் பாதியிலேயே சமன் செய்துவிட வேண்டும் என முனைப்புடன் விளையாடினர்.

ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் குரோஷியாவின் பெரிசிச் அற்புதமாக கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை வகிதத்து.

வழக்கமான இரண்டாம் பாதி ஆட்டம் முடிந்தது. அதன்பிறகு 3 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு கோல் பெற்று இருந்ததால்,   இரு அணியும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் 30 நிமிடம் கொண்ட எக்ஸ்டிரா டைம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்டத்தின் எக்ஸ்ட்ரா நேரத்தில் 109 ஆவது நிமிடத்தில் குரோஷியா வீரர் மண்ட்சுகி கோல் அடிக்க குரோஷியா அணி 2 - 1 என்ற முன்னிலை வகித்தது.


போட்டி முடியும்வரை இங்கிலாந்து அணியால் மேலதிக கோல் அடிக்க முடியாமல் போனதை அடுத்து  குரோஷியா அணி 2 - 1 கோல் கணக்கில் வென்று வரலாற்று சாதனையுடன் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தெரிவானது.

1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வரை முன்னேறி இருந்ததே அந்த அணியின் சிறந்த செயல்பாடாகும். அந்த ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இதன் பின்னர் பங்கேற்ற 4 உலகக் கோப்பை தொடர்களிலும் குரோஷிய அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருந்த நிலையில், தற்போது நடப்பு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

எதிர்வரும் ஞாயிறன்று பிரான்ஸ் vs குரோஷியா இறுதிப்போட்டி உள்ளது.
இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனையுடன் இறுதிப்போட்டிக்கு தெரிவானது குரோஷியா... வாழ்த்துக்கள்.. இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனையுடன் இறுதிப்போட்டிக்கு தெரிவானது குரோஷியா... வாழ்த்துக்கள்.. Reviewed by Madawala News on July 12, 2018 Rating: 5