இணைத் தலைவர் பதவியிலிருந்து பைசால் காசிம் நீக்கப்பட்டமை தனிப்பட்ட ரீதியில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானமாக கட்சி பார்க்காது





பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத் தலைவர் பதவியிலிருந்து பிரதி
அமைச்சர் பைசால் காசிம் நீக்கப்பட்டமை தனிப்பட்ட ரீதியில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பார்க்காது எனவும் இது தொடர்பில் அவசரமாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து பேசவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக பதவி வகித்த சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான யூ.கே. ஆதம்லெப்பை நியமிக்கப்பட்டமை தொடர்பாக பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இவ்விடயத்தில் எவ்விதமான விட்டுக் கொடுப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனங்கிப்போகாது எனவும் இது தொடர்பில் பிரதமருடைய நிலைப்பாட்டைப் பொறுத்து அடுத்த கட்டமாக நாங்கள் மிகக் காட்டமாக சில நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்திருப்பதாகவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். 
  
மேலும் பிரதமருடனான இச்சந்திப்பின்போது சமூகம் சார்ந்த பல விடயங்கள் தொடர்பிலும் பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

- ஊடகப் பிரிவு -
இணைத் தலைவர் பதவியிலிருந்து பைசால் காசிம் நீக்கப்பட்டமை தனிப்பட்ட ரீதியில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானமாக கட்சி பார்க்காது  இணைத் தலைவர் பதவியிலிருந்து பைசால் காசிம் நீக்கப்பட்டமை தனிப்பட்ட ரீதியில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானமாக கட்சி பார்க்காது Reviewed by Madawala News on July 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.