பொதுஜன பெரமுன மத்திய கொழும்பு அமைப்பாராக உவைஸ் ஹாஜியார் ..



மத்திய கொழும்பு பொதுஜன பெரமுன பிரதான அமைப்பாளாராக மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கன்றன.

கடந்த  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ ஆகியோருடன் மிக நெருக்கமாக செயலாற்றிவரும் நிலையில் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக கருதப்படும் மத்திய கொழும்பின் அக்காட்சி  அமைப்பாளர்களாக முஜீபுர் ரஹ்மான் மற்றும் பைரூஸ் ஹாஜியார் ஆகியோர் செயற்பட்டுவரும் அதேவேளை சுதந்திர கட்சி அமைப்பாளராக பைஸர் முஸ்தபா செயற்பட்டுவரும் நிலையில் பொதுஜன பெரமுன கட்சி மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியாரை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுன மத்திய கொழும்பு அமைப்பாராக உவைஸ் ஹாஜியார் .. பொதுஜன பெரமுன மத்திய கொழும்பு அமைப்பாராக உவைஸ் ஹாஜியார் .. Reviewed by Madawala News on July 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.