நீரோடையில் மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்.


நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன் டிலரி பகுதி நீரோடை ஒன்றில்  அண்மையில்
மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் நோர்வூட், ரொக்வூர் மேற்பிரிவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 30 வயதுடைய கிருபாகரன் சசிரேக்கா என்பவரே இவ்வாறு மீட்க்கப்பட்டவராவார்.கடந்த 09 ஆம் திகதி ஊடகங்களில் சடலமாக மீட்கப்பட்ட இவரை அடையாளம் காணும்படி வெளியாகிய செய்திகளைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் உறவினர்கள் நோர்வூட் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பதை பிரேத பரிசோதனைகளின் பின்பே கூற முடியும் எனவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரோடையில் மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார். நீரோடையில்  மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார். Reviewed by Madawala News on July 11, 2018 Rating: 5