மரண தண்டனை மீள அமுலாக்கப்பட்டால், இலங்கை ஜீ.எஸ்.பி.ப்ளஸ் வரிச்சலுகையை இழக்க நேரும்.


மரண தண்டனை மீள அமுலாக்கப்பட்டால், இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.ப்ளஸ்
வரிச்சலுகையை இழக்க நேரும் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கைத்தொழில்துறை ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்துக் கொண்டே மீண்டும் அந்த கடத்தல்களை வழிநடத்திய கைதிகளுக்கான தண்டனை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.



இதுதொடர்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், மரண தண்டனைக்கு எதிரான பரப்புரையை மேற்கொண்டு வருகின்ற ஐரோப்பிய ஒன்றியம், 42 வருடங்களின் பின்னர் இலங்கை மீண்டும் அதனை அமுல்படுத்துவதை விரும்பாது என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இதுதொடர்பில் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் இதுவரையில் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

விரைவில் ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் இது குறித்த தமது நிலைப்பாட்டு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மரண தண்டனை மீள அமுலாக்கப்பட்டால், இலங்கை ஜீ.எஸ்.பி.ப்ளஸ் வரிச்சலுகையை இழக்க நேரும். மரண தண்டனை மீள அமுலாக்கப்பட்டால், இலங்கை ஜீ.எஸ்.பி.ப்ளஸ் வரிச்சலுகையை இழக்க நேரும். Reviewed by Madawala News on July 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.