விஜயகலாவுக்கு எதிர்ப்பு காட்டிய பூஜாபிட்டிய பிரதேச சபை உறுப்பினர்கள்.


(மொஹொமட்  ஆஸிக்)
சிறுவர்  பராமரிப்புத் துறை இராஜாங்க   அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் அவர்கள் அன்மையில்
வெளியிட்ட கருத்தை எதிர்த்து பூஜாபிட்டிய பிரதேச சபையில் நேற்று  10 ம் திகதி இடம் பெற்ற பொதுக் கூட்டத்தின்  போதுபொதுஜன முன்னனியின் உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர்களும் கருப்புக் கொடி தூக்கியும், கருப்புப பட்டி அணிந்தும் எதிர்ப்பில் ஈடு பட்டனர்.


இந்த பிரேரனையை முன்வைத்து உரையாற்றிய முன்னால் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான அனுர மடலுஸ்ஸ கருத்து தெரிவிக்கையில்,  அரசியல் யாப்புக்கு அமைவாக சத்திய பிரமானம் செய்த பின் அமைச்சராகிய  ஒருவர் நாட்டில் வேறு ஒரு அரசை உருவாக்கும் நோக்குடன்   கருத்து தெரிவிப்பது அரசியல் அமைப்புக்கு முறனானதாகும்.

ஆகவே இவ்வாரான கருத்து தெரிவித்த விஜயகலா மஹேஷ்வரன் பாராளுமன்ற உறுப்பினருக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எஸ்' எம். கலீல் கருத்து தெரிவிக்கையில்,

  இராஜாங்க அமைச்சர் விஜயகலா  மஹேஷ்வரியின் கருத்தை ஐக்கிய தேசிய கட்சியும் ஏற்றுக்கொள்ள வில்லை. அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார் ஆகவே இது தெடர்பாக தென் பகுதி மக்களை குழப்பத்தில் இட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.



எதிர் கட்சி தலைவர் ரம்சான் மொஹமட் இவ்வாறு தெரிவித்தார். விஜயகலா  மஹேஷ்வரன் அவர்களின் கருத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கருத்துமல்ல ஐக்கிய தேசிய கட்சியன் கருத்துமல்ல. நான் வடக்கில் தொழில் புரியும் ஒருவர் என்று வகையில் எனக்கு தெரியும் வடபுல தமிழ் மக்கள் மற்றுமொரு யுத்தம் வருவதை எந்த வகையிலும் விரும்பவதில்லை  என்றும் தெரிவித்தார்.

இக் கருத்துகளை உறுப்பினர்கள் தெரிவிக்கும் போது ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆகிய கடசிகளின் உறுப்பினர்கள் கருப்புகொடி தூக்கியும் கருப்புப் பட்டி அணிந்துன் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
விஜயகலாவுக்கு எதிர்ப்பு காட்டிய பூஜாபிட்டிய பிரதேச சபை உறுப்பினர்கள்.  விஜயகலாவுக்கு எதிர்ப்பு காட்டிய  பூஜாபிட்டிய பிரதேச சபை உறுப்பினர்கள். Reviewed by Madawala News on July 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.