இன ஐக்கியத்திற்காக சர்வ மதத் தலைவர்களின் சந்திப்புக்கு அரசாங்கம் ஏற்பாடு



இன ஐக்கியத்திற்காக சர்வ மதத் தலைவர்களின் சந்திப்புக்களை நடத்த அரசாங்கம் நடவடிக்கை
எடுக்கும் என தேசிய மஸ்ஜித் விருது விழாவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த விருது விழா நேற்று முன் தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

கல்வி, சகவாழ்வு, சமூக சேவை, ஜீவனோபாயம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் சேவையாற்றிய பள்ளிவாசல்களை பாராட்டி 23 விருதுகள் வழங்கப்பட்டன.

ஆலோசனை மற்றும் நல்லிணக்க சபை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து இந்த விழாவை ஒழுங்கு செய்திருந்தது.

இலங்கையில் இவ்வாறான ஒரு வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உட்பட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.

172 பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றார்கள். உலகின் ஏனயை நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் இன ஐக்கியம் மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அங்கு சுட்டிக்காட்டினார்.

சில தரப்புக்கள் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முயற்சித்த போதும் பரஸ்பர புரிந்துணர்வுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை விருத்தி செய்வதற்காக அனைத்து மதத் தலைவர்களையும் ஒன்றிணைக்கும் மாநாட்டையும் அரசாங்கம் ஒழுங்கு செய்திருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இன ஐக்கியத்திற்காக சர்வ மதத் தலைவர்களின் சந்திப்புக்கு அரசாங்கம் ஏற்பாடு இன ஐக்கியத்திற்காக சர்வ மதத் தலைவர்களின் சந்திப்புக்கு அரசாங்கம் ஏற்பாடு Reviewed by Madawala News on July 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.