(படங்கள்) இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து... இருவர் உயிரிழப்பு.


யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் 4
பேர் படுகாமயடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏ9 பிரதான வீதியின் புளியங்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்த அனர்தம் ஏற்பட்டுள்ளது.

கொள்கலன் வாகனத்தின் சாரதியான ஜயமுஹமுதலிகே தொன் உஜித் தேஷாந்த மற்றும் கிளிநொச்சி, செல்வநகர் பிரதேசத்தை சேர்ந்த கிங்ஸ்லி, அருலைய்யா சரோஜினி தேவி என்ற பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கொள்கலன் மற்றும் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வேனும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டமையினால் இந்த விபத்து நிகழந்துள்ளது.

இரண்டு வாகனங்களும் அதிக வேகமாக பயணித்துள்ள நிலையில், சாரதிகளினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
(படங்கள்) இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து... இருவர் உயிரிழப்பு. (படங்கள்) இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து...  இருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on July 11, 2018 Rating: 5