மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறையை தேசிய காங்கிரஸ் முற்றாக எதிர்க்கின்றது



எம்.ஜே.எம்.சஜீத்
பெரும்பான்மைக் கட்சிகளிலுள்ள இனவாதிகள் இணைந்து, சிறுபான்மை  சமூகங்களின்
பேரம் பேசும் சக்திக்கு எதிராக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, சிறுபான்மை சமூகத் தலைவர்களும் துணைபோகின்னர் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

 மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறைபற்றி  'பெவ்ரல்' அமைப்பின் ஏற்பாட்டில்  பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தலைமையில் ஓவியா ஹோட்டலில் வடக்கு,கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான விசேட கலந்துரையாடலில் கருத்து தெருவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறையை தேசிய காங்கிரஸ் முற்றாக எதிர்க்கின்றது. இம்முறையினால் சிறுபான்மையினருக்கு அதிகளவில் பாதிப்பும், ஆபத்தும் ஏற்படுவதற்கான நிலை காணப்படுகின்றது.

இப்புதிய மாகாண சபை  தேர்தல் முறையை எதிர்த்தும் அது தொடர்பான பாதிப்புக்கள் பற்றியும் தேசிய காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற எல்லை நிர்ணய ஆலோசனைக் கூட்டத்தின் போது அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

 வடக்கு கிழக்கு மாகாண மக்களின் இனப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்தத்தினால் துரதிஸ்ட வசமாக செயற்படுத்;த முடியாத நிலைமை ஏற்பட்டது. ஆனால் வடக்கு, கிழக்கு மாகாண சபையைத் தவிர ஏனைய 7 மாகாணங்களிலும் மாகாண சபைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன.  நமது நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளில் 7 மாகாண சபைகளை ஒருவிதமாகவும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளை வேறுவிதமாகவும் மத்திய அரசாங்கம் செயற்படுத்தும் நிலைமை மாற வேண்டும்.

13வது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டிய அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்கு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு மூன்று வருடங்களாகியும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் சிறுபான்மை மக்களின் கவனங்களை வேறு திசைக்கு திருப்பும் நோக்குடன் புதிய உள்ளுராட்சி திருத்தச்சட்டத்தினையும், மாகாண சபைகளுக்கான புதிய திருத்தச் சட்டத்தினையும் அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கான ஆதரவினை தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளனர்.

 புதிய வட்டார முறையில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் முறைமையினால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கும் புதிய அரசியல் கலாசாரம் உருவாகியுள்ளது. புதிய முறையிலான உள்ளுராட்சி  தேர்தல் முறைமையை கொண்டு வந்தவர்களே உள்ளுராட்சி தேர்தல் முடிந்த கையோடு புதிய தேர்தல் முறையை இரத்துச் செய்து பழைய முறையிலையே உள்ளுராட்சி தேர்தல் நடாத்துவது என தெரிவித்துள்ளனர்.

13வது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டிய அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் மீண்டும் பழைய முறைமையிலையே மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென தெரிவித்து பதவிக்காலங்களை நிறைவுசெய்துள்ள கிழக்கு, வடமேல், சப்பிரகமுவ மாகாண சபைகளின் தேர்தலினை உரிய காலத்தில் நடாத்தும் அதிகாரம் இருந்த போதும் அரசியல் அமைப்பிற்கு அப்பால் சென்று  மாகாண சபைகளுக்குரிய தேர்தல் நடாத்தும் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் பாராளுமன்றத்திற்கு வழங்கி மக்களின் தீர்பிற்கு எதிராக தீர்மானம் எடுப்பதற்கு நமது தமிழ், முஸ்லிம் தலைமைகள் துனைபோய் வரலாற்றுத் தவறினை புரிந்துவிட்டு தற்போது மக்கள் மத்தியில் வந்து  பழைய முறையிலையே மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படாத வேண்டுமென தெரிவிப்பது வேடிக்கையான விடயமாகும்.

 புதிய முறையிலான மாகாண சபைத் தேர்தல் நமது நாட்டில் நறைபெறுமானால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் முஸ்லிம், தமிழ், மலையக சமூகங்களின் மாகாண சபை பிரதிநிதித்துவங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக 18 மாவட்டங்களில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் மாகாண சபை பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்யும் நிலைமை உருவாகியுள்ளது. இதற்கான முழுப் பொறுப்பினையும் முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவுத் தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறையை தேசிய காங்கிரஸ் முற்றாக எதிர்க்கின்றது மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறையை தேசிய காங்கிரஸ் முற்றாக எதிர்க்கின்றது Reviewed by Madawala News on July 06, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.