நேற்று முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மனைவியும் மனைவியின் காதலனும் கைது..


கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர்
உயிரிழந்திருந்த சம்பவத்தில் அவரது மனைவியும் மனைவியின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவரது சடலம் நேற்று காலை மீட்கப்பட்டிருந்தது.


ஹுனுபிட்டிய, நாஹேனவத்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனுஷ்க தரங்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வத்தள, ஹெந்தல சந்தியில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர் என்றும் அவருடைய வீட்டிற்கு வந்த இருவரினால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸா்ர தெரிவிக்கின்றனர்.
நேற்று முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மனைவியும் மனைவியின் காதலனும் கைது.. நேற்று முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மனைவியும் மனைவியின் காதலனும் கைது.. Reviewed by Madawala News on July 10, 2018 Rating: 5