நாங்கள் ஆட்சிக்கு வரும் போது, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினைகளுக்கு முழுமையான முற்றுப் புள்ளியை வைப்போம்.


-இக்பால் அலி-
முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினை வெளிசக்திகளின் மூலம் திட்டமிட்டு
அரங்கேற்றப்பட்டு வரும் விடயமாகும். அது முழு இலங்கைக்கும் உரித்தான பிரச்சினை.

அதற்குப் பின்னால் ஒரு சில குறிப்பிட்ட முகவர்கள் இருக்கின்றார்கள். நாங்கள் ஆட்சிக்கு வரும் போது அதற்கு ஒரு முழுமையான முற்றுப் புள்ளியை வைப்போம் என்று என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பதற்காக கண்டியில் இருந்து ஐ. ஐனூடீன் தலைமையில் சென்ற முழுவினருடன் கலந்தரையாடல் ஒன்று (10) இடம்பெற்றது அதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அந்தச் சந்திப்பின்போது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

அந்நிய நாட்டு சூழ்ச்சிகள் என்பது எமது நாட்டுக்கு புதியதல்ல, மக்கள் விடுதலை முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியாகினர்.

பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாக அதிலும் அயிரக் கணக்கான உயிர்கள் பலியாகினர். வெளிநாட்டுச் சக்திகளுடைய சூழ்ச்சிகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன.

இன்று முஸ்லிம்களுடைய வியாபார நிலையங்களையும் பொருளாதாரத்தையும் முடக்குவதற்கு சதி செய்து வருகின்றனர். இது எமது நாட்டுக்குரிய பிரச்சினை. நாங்கள் ஆட்சிக்கு வரும் போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.


முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷவாஹீர் சாலி, நசார் ஹாஜியார். அக்குறணை கலீல். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகாரத்திற்கான இணைப்பதிகாரி சிராஷ் யூனுஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி-
நாங்கள் ஆட்சிக்கு வரும் போது, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினைகளுக்கு முழுமையான முற்றுப் புள்ளியை வைப்போம். நாங்கள் ஆட்சிக்கு வரும் போது, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினைகளுக்கு முழுமையான முற்றுப் புள்ளியை வைப்போம். Reviewed by Madawala News on July 11, 2018 Rating: 5