வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி இலட்சக்கணக்கில் மோசடி.


வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடற்படை சிப்பாயுடன் இணைந்து செய்த இந்த மோசடி மூலம் 80 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு புலனாய்வுப் பிரிவின் சிறப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 20 பேரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் மோசடி செய்த நிலையில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அருகில் வைத்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தோனிசாமி பாக்யராணி என்ற இந்த பெண் இதுவரையில் காஞ்சனா செவ்வந்தி என்ற பெயரில் மோசடி செய்து வந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற கோடீஸ்வர பெண் என தன்னை அடையாளப்படுத்தி, அங்கு தனக்கு சொந்தமான தொழிற்சாலையில் வேலை பெற்று தருவதாக இளைஞர் யுவதிகளிடம் பணம் மோசடி செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுப்பட்டுள்ளார். கடந்த வருடம் முதல் அவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



கடந்த வருடம் மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் சோதிட நடவடிக்கை மேற்கொள்ளும் தேவாலயத்திற்கு சென்ற இந்த பெண் அங்கு வந்த மக்களின் நம்பிக்கையை வென்று 80 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்துள்ளார்.

இந்த வருடம் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் பணிக்கு செல்ல ஆயத்தமாகுமாறு கூறி இளைஞர்களை இந்த பெண் ஏமாற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி இலட்சக்கணக்கில் மோசடி. வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி இலட்சக்கணக்கில் மோசடி. Reviewed by Madawala News on July 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.