ஏறாவூர் மாக்கான் மாக்கார் மஹா வித்தியால குறைகளை நிவர்த்தி செய்ய இரண்டு இலட்சம் வழங்கிய கிழக்கு ஆளுநர் .


(அப்துல்சலாம் யாசீம் )
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பகுதியிலுள்ள பாடசாலைகளில் நிலவுகின்ற தளபாட குறைபாடுகளை
நிவர்த்திக்குமாறு கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர்  மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்கு கோரிக்கையொன்றினை  விடுத்தார்.

அக்கோரிக்கையை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம  இன்று (13) ஏறாவூர் மாக்கான் மாக்கார் மஹா வித்தியாலயத்தில் நிலவுகின்ற தளபாட குறைபாடுகளை உடனடியாக நிவர்த்திக்குமாறு இரண்டு இலட்சம் ரூபாய் காசோலையினை வழங்கி வைத்தார்.இதன் போது  முன்னாள்   சுகாதார  அமைச்சர் எம்.எஸ்.சுபைர்
அப்பாடசாலையின் அதிபர் மற்றும்
பிரதேச சபை உறுப்பினர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது

 கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகளை அதிகளில் நிவர்த்தி செய்து வருவதாகவும் மிகுதியான பாடசாலைகளில் நிலவுகின்ற குறையாடுகளை கூடிய விரைவில் நிவர்த்திக்கவுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.
ஏறாவூர் மாக்கான் மாக்கார் மஹா வித்தியால குறைகளை நிவர்த்தி செய்ய இரண்டு இலட்சம் வழங்கிய கிழக்கு ஆளுநர் . ஏறாவூர் மாக்கான் மாக்கார் மஹா வித்தியால குறைகளை நிவர்த்தி செய்ய இரண்டு இலட்சம் வழங்கிய கிழக்கு ஆளுநர் . Reviewed by Madawala News on July 13, 2018 Rating: 5