அக்குறணையில் இனிதே நிறைவடைந்தது 'ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்'' நூல் வெளியீட்டு விழா.


கஹடகஸ்திகிலிய,வெலிகொள்ளாவயைச் சேர்ந்த அஷ்-ஷெய்க் ஏ.ஜீ.எம்.வஸீம் மீஸானி
எழுதிய ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும் எனும் நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018)இனிய காலைப் பொழுதில், சுமார் 09:30 மணியளவில் மீஸானியா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் அல் ஹாஜ் இஹ்திஸாம் தலைமையில்  அக்குறணை, மீஸானியா அரபுக் கல்லூரி கேடபோர் கூடத்தில் வெகுவிமரிசையாக நடந்தேறியது.

கல்வி மேம்பாட்டுக்கான அல் கைர்  நிறுவனம் ஏற்பாடு செய்த இவ்விழாவில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அஷ்-ஷெய்க் மஸாஹிர் நளீமி கலந்து சிறப்பித்ததுடன், நூல் விமர்சன உரையை உண்மை உதயம் சஞ்சிகையின் ஆசிரியர் அஷ்-ஷெய்க் இஸ்மாயில் (ஸலபி) நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் நூலாசிரியர் அஷ்-ஷெய்க் வஸீம் மீஸானி கருத்துரை ம்,ஏற்புரையையும் வழங்கியதோடு கௌரவ அதிதிகளினால் வாழ்த்துரைகளும் இடம் பெற்றன.

இந்நூல் உருவாக்கத்திற்கும்,வெளியீட்டி ற்கும் ஒத்துழைப்பு வழங்கிய அத்துனை இஸ்லாமிய உறவுகளுக்கும் நூலாசிரியர் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்வை பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர் தொகுத்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.


அக்குறணையில் இனிதே நிறைவடைந்தது 'ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்'' நூல் வெளியீட்டு விழா.  அக்குறணையில் இனிதே நிறைவடைந்தது 'ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்'' நூல் வெளியீட்டு விழா. Reviewed by Madawala News on July 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.