கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 66 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள்.


திருகோணமலை, திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கந்தை கடற்பிரதேசத்தில்
ஐந்து கிலோ 550 கிராம் நிறை கொண்ட போதைப்பொருளை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவை நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்டையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 66 மில்லியன் ரூபா எனவும், குறித்த போதைப்பொருளை வெளிநாட்டில் இருந்து விநியோகத்திற்காக கொண்டு வந்து இந்த பகுதியில் புதைத்து வைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கந்தை கடற்பிரதேசத்தில் ஐந்து கிலோ 550 கிராம் நிறை கொண்ட போதைப்பொருளை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவை நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்டையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 66 மில்லியன் ரூபா எனவும், குறித்த போதைப்பொருளை வெளிநாட்டில் இருந்து விநியோகத்திற்காக கொண்டு வந்து இந்த பகுதியில் புதைத்து வைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 66 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள். கடற்கரையில்  புதைத்து வைக்கப்பட்டிருந்த 66 மில்லியன் பெறுமதியான  ஹெரோயின் போதைப்பொருள். Reviewed by Madawala News on July 14, 2018 Rating: 5