சிறுவனிடம் சிக்கிய ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள்..


ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுடன் சிறுவனொருவன் யாழ் நகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலையே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்.

இதன் போது ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் மூன்று பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரைத் தடுத்து வைத்து பல கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சிறுவனிடம் சிக்கிய ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள்.. சிறுவனிடம் சிக்கிய ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள்.. Reviewed by Madawala News on July 10, 2018 Rating: 5