நாளை நள்ளிரவு முதல் பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும்.


நாளை நள்ளிரவு முதல் பாண் தவிர்ந்த மற்ற பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை5 ரூபாவால் அதிகரிக்கப்படும்

என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலரின் பெறுமதியுடன் மூலப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பதால், இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் சூழ்நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்குமாறு அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்ததை அடுத்தே இந்த விலையேற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருளின் விலை அதகரிப்பானது, நேரடியாக பேக்கரி உற்பத்திகளை பாதிக்காது என்றபோதிலும், டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக என்.கே. ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

பேக்கரி உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் வௌிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் 50 வீதமானவை பேக்கரி உற்பத்திகளுக்கே பயன்படுத்தப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முட்டைகளின் விலைகளும் 16 – 50 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாளை நள்ளிரவு முதல் பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும். நாளை நள்ளிரவு முதல்  பாண் தவிர்ந்த  அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படும். Reviewed by Madawala News on July 14, 2018 Rating: 5