சுமார் 5 கோடி வெளிநாட்டுப் பணத்தை இலங்கைக்குள் எடுத்து வர முயற்சித்தவர்கள்...


48 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை இலங்கைக்குள்
எடுத்து வர முயற்சித்த இந்தியர் ஒருவரும் 2 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 1.55 க்கு சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த UL 306 விமானத்தில் வருகை தந்த இவர்களிடம் இருந்து சுங்க அதிகாரிகளால் சுமார் 48 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட வௌிநாட்டு நாணயங்களில் 153,250 யூரோ, 52,950 அமெரிக்க டொலர்கள், 264,000 சௌதி ரியால், 18,500 கட்டார் ரியால் என்பவ அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



சுங்க அதிகாரிகளான ரி.ஏ. குணசேகர, டீ. ரங்கராஜ், மஸ்கோரல மற்றும் எஸ். சமரசேகர ஆகிய உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்ட இந்தியர் 40 வயதுடையவர் எனவும் இலங்கையர்கள் இருவரும் 40 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சுமார் 5 கோடி வெளிநாட்டுப் பணத்தை இலங்கைக்குள் எடுத்து வர முயற்சித்தவர்கள்... சுமார் 5 கோடி வெளிநாட்டுப் பணத்தை இலங்கைக்குள் எடுத்து வர முயற்சித்தவர்கள்... Reviewed by Madawala News on July 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.