குழந்தை விலை 10 இலட்சம் ரூபாய்... தாய் , பாட்டி , தாத்தா மற்றும் பெண் தரகர் கைது.


15 நாட்களேயான சிசுவொன்றை விற்பனை செய்ய முற்பட்ட 4 பேர் பெஹலியகொடை
குற்றவியல் பிரிவால் நேற்று பிற்பகல் கைது  செய்யப்பட்டனர்.

சிசுவின் தாய் , பாட்டி , தாத்தா மற்றும் பெண் தரகர் ஆகியோரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ராகமை மருத்துவமனைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குழந்தை 10 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவிருந்தாக காவற்துறை மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.காவற்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் மஸ்கெலியா மற்றும் ராகமை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

அவர்கள் இன்றைய தினம் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
குழந்தை விலை 10 இலட்சம் ரூபாய்... தாய் , பாட்டி , தாத்தா மற்றும் பெண் தரகர் கைது. குழந்தை விலை 10 இலட்சம் ரூபாய்... தாய் , பாட்டி , தாத்தா மற்றும் பெண் தரகர் கைது. Reviewed by Madawala News on July 14, 2018 Rating: 5