உயிர் அச்சுறுத்தலுக்கு எதிராக கிராம மக்கள் ஆர்பாட்டம்.


வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நீலியாமோட்டை பிரதேசத்தில் காட்டு யானைகளினால்
அச்சுறுத்தல் மற்றும் பயன்தரும் மரங்கள் அழிக்கப்படுதலில் இருந்து தமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக அப்பகுதி மக்கள் நீலியாமோட்டை வீதியினை தடை செய்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களால் மின்சார வேலி போடு, மிகுதி வாழ்வாதாரங்களை காப்பாற்ற உதவு, அழிந்தவை எல்லாம் அடகு வைத்தவையல்ல மீட்பதற்கு, கண்களை திறந்து பார், எங்கள் காணிகளை வந்து பார் போன்ற பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட பததாதைகளை கைகளில் ஏந்தியவாறு வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் ஒரு மணித்தியாலயமாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அவ்விடத்திற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் செட்டிக்குளம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியதுடன்,

இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்ததன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களால் செட்டிக்குளம் உதவி பிரதேச செயலாரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிர் அச்சுறுத்தலுக்கு எதிராக கிராம மக்கள் ஆர்பாட்டம். உயிர் அச்சுறுத்தலுக்கு எதிராக கிராம மக்கள் ஆர்பாட்டம். Reviewed by Madawala News on June 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.