(வீடியோ) அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு சாதி மதம் பார்க்கத் தேவையில்லை . பிரதேச சபைத்தலைவர் உபரத்ன ஹிமி


(அப்துல்சலாம் யாசீம்)
அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு சாதி மதம் பார்க்கத் தேவையில்லை மொறவெவ
பிரதேச சபைத்தலைவர் உபரத்ன ஹிமி!

திருகோணமலை  மாவட்டத்தின்  மொறவெவ பிரதேசத்தில்  அனைத்து இன மக்களுக்கும்  சமனான முறையில் சேவையாற்றுவதாகவும்  அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது இன மத வேறுபாடின்றி திட்டங்களை முன்னெடுப்பதாகவும் மொறவெவ பிரதேச சபைத்தலைவர்  கல்ஹேன் கொட உபரத்ன ஹிமி தெரிவிதுதார்.


கடந்த காலங்களில் தமிழ் அரசியல் வாதிகள் தமிழ் மக்களுக்கும் சிங்கள அரசியல் வாதிகள் சிங்கள மக்களுக்கும் அதேபோல தமக்கு வாக்களித்தவர்களுக்கே அதிகளவில் சேவையாற்றி வந்ததாகவும் தற்போது இதனை மாற்றி அனைத்து இனங்களுக்கும் சேவையாற்றுவதற்கு முன்வர வேண்டுமென அனைத்து உறுப்பினர்களுக்கும் தௌிவு படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.


மொறவெவ பிரதேத்திலுள்ள மீள்குடியேறிய கிராமமான பாம்மதவாச்சி கிராமமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்கு கூட பாதைகள் இல்லாமல் ஒற்றையடி பாதையினூடாகவே செல்வதாகவும் தங்களுக்கு வீதிகளை செப்பனிட்டு தருமாறு உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை   வெற்றிபெற்றதையடுத்து  மொறவெவ பிரதேச சபைத்தலைவர்  பிரதேச சபைகளின் பெகோ இயந்திரம் மற்றும் உழவு இயந்திரம் ,ஆளணிகளை பயன்படுத்தி நேற்றைய தினமான புதன்கிழமை மாத்திரம் ஆறு வீதிகளுக்கு கிரவல் இட்டு மக்களுக்கு பயன்படுத்தும் விதத்தில் நிர்மானம் செய்து கொடுத்துள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.


அத்துடன் விளையாட்டு மைதானமொன்றினை நிர்மாணிப்பதற்குறிய நடவடிக்கைகளை  முன்னெடுத்து வருவதாகவும்  அவ்வேலைத்திட்டத்தினை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதேச சபைத்தலைவரும் பௌத்த மதகுருமாருமான கல்ஹேன்கொட உபரத்ன ஹிமி தெரிவித்தார்.
(வீடியோ) அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு சாதி மதம் பார்க்கத் தேவையில்லை . பிரதேச சபைத்தலைவர் உபரத்ன ஹிமி (வீடியோ) அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு சாதி மதம் பார்க்கத் தேவையில்லை . பிரதேச சபைத்தலைவர் உபரத்ன ஹிமி Reviewed by Madawala News on June 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.