போதியளவான பணத்தை சம்பாதிக்காத நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையர் நாடு கடத்தல்.


பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளரான ஹேமகே பத்திரனகே, (வயது 27)
விரைவில் நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்பட்டுள்ளனவென, அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர், பிரித்தானியாவில் சிறுவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கி வருகின்றார். போதியளவான பணத்தை சம்பாதிக்காத காரணத்தால், அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அவர், விசாவுக்கான தகுதியைப் பெற்றுக் கொள்வதற்கு, 30,000 பவுண்ட்  சம்பாதிக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

மனித உரிமைகள் அடிப்படையில் தங்கியிருப்பதற்கு, உள்துறை அலுவலகத்தில் அவர் முறையிட்டுள்ளாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ள அந்தச் செய்தியில், அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டை விட்டு செல்ல 20 நாட்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதியளவான பணத்தை சம்பாதிக்காத நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையர் நாடு கடத்தல். போதியளவான பணத்தை சம்பாதிக்காத நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையர் நாடு கடத்தல். Reviewed by Madawala News on June 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.