ஹஜ்ஜூக்கு அனுப்பும் விடயத்தில் தொடரும் தவறுகள்.. ஹஜ் முகவா்கள் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.


(அஷ்ரப் ஏ சமத்)
இந்த ஆட்சியிலும் கடந்த 3 வருடங்களாக  முஸ்லீம் சமய விவகார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஹஜ் கமிட்டியும்   இலங்கையிலிருந்து வருடா வருடம்  3000 ஹாஜிமார்களுக்கு ஹஜ்ஜூக்கு அனுப்பும் விடயத்தில் தவறிழைத்து  வருகின்றது.

இது சம்பந்தமாக எமது மூன்று ஹஜ் முகவர் சங்கங்கள் இணைந்து இவ் ஊழல் மோசடிகளை  ஜனாதிபதியின் கீழ் உள்ள  ஊழல் மோசடி விசாரனைக் ஆனைக் குழுவுக்கு அறிவித்திருந்தோம்.

அதற்கமைவாக ஜனாதிபதி விசரனைக் குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26)ம் திகதி எங்களது பிரநிதிகளை  சகல தஜ்தாவேஜூக்களுடன் விசாரனைக்கு வருமாறு அழைத்துள்ளது.  

அதற்கமைவாக எமது பிரநிதிகள் உரிய தகவல்கள் எங்களிடம் உள்ளன. விசாரனையின்போது இவற்றினை அவர்களிடம்  சமர்ப்பிப்போம். இந்த நாட்டில் சிறந்த சீரானதொரு   ஹஜ் முறைமையை நாம் எதிர்பார்க்கிறோம் என   ஹஜ் முகவர்கள்  அமைப்பின் பிரதித் தலைவர் எம். முஹம்மத் தெரிவித்தார்.


இன்று கொழும்பு 2 நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  முஹம்மத் இத் தகவல்களைத் தெரிவித்தார். இச சந்திப்பில் மேலும் ஹஜ் முகவர்கள் முகாமைத்துவ பணிப்பாளர்களான,  என் எஸ் சுபையில், மொஹம்மட் பாஹிம், நிஜாமுத்தீ்ன்,  மொஹம்மட் பாஹீம்,  எஸ்.எச் சிராஜடீன் ஆகியோறும் இவ் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

இங்கு  அல்ஹாஜ் மொஹமட் தகவல் தருகையில் -

வருடா வருடம் சவுதி அரேபியாவினால் 2800 ஹஜ் கோட்டாக்களையே இலங்கைக்கு கிடைத்து வருகின்றது. அதில் மேலும் 200 கோட்டாக்ள் ஊழியர்களுக்கு  வழங்கப்படுகின்றது.  இந்த நாட்டில் 3 ஹஜ் முகாவா்கள் சங்கங்கள் இயங்குகின்றன.

அதில் 95 முகவர்கள் உள்ளனர்.  இந்த முகாவர்களாளேயே முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், ஹஜ்க்குழு, அமைச்சும் சம்பந்தப்பட்டுள்ளது.  இலங்கையில் ஹஜ்ஜூக்கு செல்வதற்கு ஒவ்வொருவரும் திணைக்களத்தில்  25 ஆயிரம் ருபாவை செலுத்தி அங்கத்துவம் பெறுகின்றனர்.இதுவரை 25ஆயிரம் முஸ்லீம் ஹஜ்ஜூக்குச் செல்வதற்கா பதிவு செய்து வருடக் கணக்கில்  காத்துக் கொண்டு உள்ளனர்.

கடந்த வருடம் 3500 பேர்  ஹஜ்ஜூ செல்வதற்காக ஒவ்வொருவரும் திணைக்களத்தில் 25ஆயிரம் ருபா செலுத்தியுள்ளனர்.  இதனால் இம் மக்கள் செலுத்திய 9 கோடி ருபாவும் எங்கு சென்றது? அதற்கான பற்றுச் சீட்டு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.  மற்றும் ஹஜ் கமிட்டி இதற்குரிய கணக்கு அறிக்கைகள், வங்கி அறிக்கைகள்  எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. 2012ல் உயர் நீதிமன்றம் ஹஜ் கமிட்டிக்கும் திணைக்களத்திற்கும் ஒரு வழிகாட்டி முறை ஒன்றை சமர்ப்பித்தது அதனை பின்பற்றும் படியும் திணைக்களத் தலைவருக்கு அறிவித்திருந்தது.

 இதுவரை இம்முறைமை இங்கு  பின்பற்றப்படவில்லை. அதில் கூட 25ஆயிரம் ருபா ஹாஜிகளிடமிருந்து அறவிடும்படி குறிப்பிடப்படவில்லை.

இதே போன்று தான் கடந்த  வருடம் சவுதி அரேபியா 3000 ஹஜ் விசாவுக்குப் பிறம்பாக இறுதி நேரத்தில் மேலும் 600 கோட்டாக்களை அனுப்பியிருந்தது.  அதில் ஹஜ் கமிட்டியி முகவர்களுக்கு வழங்காமல்  கமிட்டியே அதனை கையாண்டது. ஒவ்வொரு விசாவுக்கும்  தலா ஒரு இலட்சம் அறவிடப்பட்டது.விசா வழங்கிய பின்பு மேலும் 44 ஆயிரம் ருபா அறவிட்டார்கள். இவகளை  அழைத்துக் கொண்டு சவுதியில் ஒரு பழைய கட்டிடங்கள் இரண்டில் தங்க வைத்து  ஹாஜிகள் கஸ்டங்களை எதிர்  நோக்கினார்கள் ஒரே ஒரு லிப்ட் தான அதில் உள்ளது.

இந்த  600 பேரும் தலா 1இலட்சத்து 44 ஆயிரம் ருபா வழங்கியுள்ளார்கள் மொத்தமாக 6 கோடி 60 இலட்சம் ருபா   பணத்துக்கு இதுவரை முறையானதொரு பற்றுச் சீட்டுக்கள் வழங்கப்பட வில்லை.  திணைக்களத்தின்  வருடாந்த கணக்கு அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. 95 முகவா்களிடம் இது பற்றி கலந்துரையாடப்படவில்லை. இவ் பதிவுகள்  திணைக்களத்திலோ கமியிட்டிலோ   பதியப்படவில்லை.

 ஹஜ் கமிட்டியின் தலைவராக அமைச்சரின் மைத்துனர் டொக்டர் சியாத் தலைமைப்பதவி வகிக்கின்றார்.   தினைக்களத்தில் ஹஜ் செல்வதற்காக இதுவரை பதிவிட்ட 25 ஆயிரம் பேரில் ஒரு நிலையான தொடர் இலக்கம் இல்லாது வருடாந்தம் வரும்  ஹஜ் கோட்டா  2800  திணைக்களத்தில் பதியப்பட்ட  1500பேருக்கு மட்டுமே கடிதம் அனுப்பப்படுகின்றது. மிகுதி 1300 கோட்டாக்கள் தொடர் இலக்கம் இல்லாமல் கமிட்டித் தலைவருக்கு ஏற்ற விதத்திலும், அரசியல்வாதிகளுக்கும்  விரும்பியவா்களை பதிவிட்டு அனுப்புகின்றனர். இதனால் வருடக் கணக்கில் ஹஜ் செல்வதற்காக பதிந்தவா்கள்  வசதி வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதுவும்  ஒரு முறைகேடானதொரு முறைமையாகும்.


உயர் நீதிமன்றத்தினால் திணைக்களத்திற்கு அளிக்கப்பட்ட  வழிகாட்டி மற்றும் கிரிட்டிய முறைமை கடந்த 3  வருடகாலமாக பின்பற்றப்படவில்லை. அவா்களுக்கு ஏற்ற முறையிலேயே முகவா்களையும் தெரிபு செய்கின்றனர்.  அதேபோன்று” சோ்விஸ் அறவீடு என  முகவா்களிடம் 4ஆயிரம் ருபாவும் அறவிடப்படுகின்றது . 

இம்முறை ஒரு நிதிக் கொள்கைகிள்ளாமல் நிதி சேகரிப்படுகின்றது.  இந் நிதிகள் முறைமையற்ற ஒரு நிர்வாக அரச திணைக்கள க்குழு, அரச கொள்கை ஒன்று வகுக்கப்பட வில்லை  இவை பற்றி எமது 3 சங்கங்களும் நீதிமன்றம், ஜனாதிபதி விசாரனைக்குழு , மனித உரிமைக்கும் முறையிட்டுள்ளோம்.

ஒரு நிலையானதொரு முறைமையை ஹஜ் கமிட்டி அறிமுகப்படுத்துதென்றால் எமது முகா்வா்கள் 95 பேரும் கலந்துரையாடப்படல் வேண்டும் வருடாந்த 95 பேருக்கும் ஒவ்வொரு வருடம் 50 கோட்டாக்கள் வழங்கப்படுகின்றது. 

ஹஜிகளை பிழையாக வழநடாத்திய முகவா்களுக்கு எதிராக ஹாஜிகள் திணைக்களத்தில்  முறைப்பாடு செய்த 12க்கும் மேற்பட்ட முகவா்கள் இம்முறை  இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டில்   இலங்கை ஹஜ் முகவா்கள், உலமாமக்கள் ஹஜ் குழு, என 3 முகவா்கள் சங்கங்கள்  இயங்குகின்றன.   ஆகவே தான் எதிா்வரும் காலத்தில் ஒரு சீரான முறைமை இந்த நல்லாட்சியில்  ஹாஜிகளுக்கு வசதி வாய்ப்பு செயல்படுத்தப் படல் வேண்டும்.




அத்துடன்  ஜனாதிபதி தலையிட்டு கடந்த 3 வருட காலத்தில் இடம் பெற்ற நிதி மோசடி, முறையற்ற தெரிபுகள் நிர்வாகச் சிர்கோடுகளை  ஒரு ஆணைக்குழு அமைத்து விசாரனை செய்யப்படல் வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக ஹஜ் முகவர்கள் சார்பாக  கோரிக்கை விடுக்கின்றோம் என முஹம்மத் தெரிவித்தார்.
ஹஜ்ஜூக்கு அனுப்பும் விடயத்தில் தொடரும் தவறுகள்.. ஹஜ் முகவா்கள் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள். ஹஜ்ஜூக்கு அனுப்பும் விடயத்தில் தொடரும் தவறுகள்..  ஹஜ் முகவா்கள் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள். Reviewed by Madawala News on June 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.