இந்துமத விவகாரப் பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்கிறார் காதர் மஸ்தான்.


வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக,
கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காதர் மஸ்தான், தான் வகிக்கும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில், இன்று (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், அவர் இந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வாரெனத், தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை நியமிக்கும் போது, இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் எம்.பி நியமிக்கப்பட்டார். இதனால், தமிழ் அரசியலில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகள் மற்றும் கருத்துகளைத் தொடர்ந்து, அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்துமத விவகாரப் பிரதியமைச்சுப் பதவியை இராஜினாமான செய்துவிட்டு, வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்கான பிரதியமைச்சுக்கு, மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் ​தெரிவிக்கின்றன.
இந்துமத விவகாரப் பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்கிறார் காதர் மஸ்தான். இந்துமத விவகாரப் பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்கிறார் காதர் மஸ்தான். Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.