தலைப்பிறை பார்க்கும் மாநாடு நாளை : ஜம்மியத்துல் உலமா பிறைக்குழுவிடம் இருந்து நாட்டு முஸ்லிம்களுக்கு ஒரு அறிவிப்பு.


ஹிஜ்ரி  1439 ஷவ்வால் மாத தலைப்பிறை பார்க்கும் மாநாடு  தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல்
உலமா பிறைக்குழு  நாட்டு முஸ்லிம்களுக்கு விளக்கம்  ஒன்றை வழங்கி உள்ளது.

அதன்படி தலைப்பிறை பார்க்கும் மாநாடு   நாளை வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரியபள்ளிவாயலில் நடைபெறும்.

இதில் ஜம்மியத்துல் உலமா பிறைக்குழு, கொழும்பு பெரியபள்ளிவாசல் நிர்வாகிகள், இஸ்லாம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் இணைந்து இந்த தீர்மானத்தை எட்டியதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிறைக்குழு தெரிவித்துள்ளது.

 நாளை வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலை பிறை பார்ப்பதாகவே கொழும்பு பெரிய பள்ளிவாயலும் அரித்து இருந்தது.

அதேவேளை இன்று நாட்டின் எப்பாகத்திலாவது பிறை கண்டால் கொழும்பு பெரிய பள்ளிவாயலுக்கு,  பிரதேச ஜம்மியத்துல் உலமா ஊடாக  அல்லது நேரடியாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.


தலைப்பிறை பார்க்கும் மாநாடு நாளை : ஜம்மியத்துல் உலமா பிறைக்குழுவிடம் இருந்து நாட்டு முஸ்லிம்களுக்கு ஒரு அறிவிப்பு. தலைப்பிறை பார்க்கும் மாநாடு   நாளை : ஜம்மியத்துல் உலமா பிறைக்குழுவிடம் இருந்து  நாட்டு முஸ்லிம்களுக்கு ஒரு அறிவிப்பு. Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5