வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாள் ; ஜம்இய்யதுல் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா- பரகஹதெனிய



JASM பிறை அறிவிப்பு
ஜம்இய்யதுல் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா- பரகஹதெனிய
தேசியப் பிறையின் அடிப்படையிலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறை தீர்மானத்தின் அடிப்படையிலும் செயல் பட்டு வரும் அமைப்பாகும்.

இன்றைய பிறை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்தை எதிர்பார்த்திருந்தது போலவே, பிறை தென்பட்டது குறித்த ஆய்வுகளையும் JASM மேற் கொண்டது. 

அவ்வகையில் பிறை தென்பட்ட விடயத்தை உருதிப் படுத்திக் கொள்ள முடியுமான முயற்சிகள் செய்து பிறை கண்டதை உருதிப் படுத்திக் கொண்டதாகவும், அல்லாஹ்வை அஞ்சி உருதியான பிறையின் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் நாளை 15/06/2018 வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாள் என்பதாகவும் ஜம்இய்யதுல் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா- பரகஹதெனியவின் உண்மை உதய மாத இதழ் ஆசிரியரும், அழைப்பாளருமான அஷ்ஷேய்க் இஸ்மாயில் ஸலபி அவர்கள்  உத்தியோகப் பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

"அல்லாஹ் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக"

தகவல்:- அபூ ஸுமையா- மடவளை பஸார்.
வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாள் ; ஜம்இய்யதுல் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா- பரகஹதெனிய  வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாள் ; ஜம்இய்யதுல் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா- பரகஹதெனிய Reviewed by Madawala News on June 15, 2018 Rating: 5