ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான தனியானதொரு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது.


-இக்பால் அலி-
புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான தனியானதொரு  சட்ட மூலத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில்
அங்கீகாரத்துடன் மேற்கொள்வதற்கான வாய்ப்பை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.


இது தொடர்பாக அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
புனித ஹஜ் கடமை விடயம் தொடர்பாக 2013 ஆம் ஆண்டின் உயர் நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் சகல ஹஜ் நடவடிக்கைகளும் இதுவரையிலும் மேற் கொள்ளப்பட்டு வந்தன. ஆனாலும் ஹஜ் கடமை விடயம் தொடர்பாக முகவர்கள் முதல்  அதிகாரிகள் வரை பல தரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர்.


எதிர்கால நலன் கருதி சகல  வசதிகளுடன் ஹஜ் விவகாரம் தொடர்பாக முன்னெடுப்பதற்கு இந்த சட்ட மூலத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றமை வரவேற்கத் தக்க அம்சமாகும்.


எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஹஜ் விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கின்றேன். என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான தனியானதொரு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது. ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான தனியானதொரு  சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது. Reviewed by Madawala News on June 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.