SAD NEWS : சக மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளான மொஹமட் பைசுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


சிலாபத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் இடம் பெற்ற மோதலில்
பாடசாலை மாணவத் தலைவன்
சவறான பிரதேசத்தை சேர்ந்த மெஹமட் ரிஸ்வி மொஹமட் பைசுல் என்ற 16 வயது மாணவன் ஆபத்தான நிலையில் கொழும்பு  தேசிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட  சம்பவம் தொடர்பில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இன்று காலை இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்ட சோக தகவலை அங்கிருந்து எம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

 கடந்த 15 ஆம் திகதி இரவு 10 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்று  நேற்று மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் குறித்த மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர் கோமா நிலைக்கும் சென்மேறிருந்தார்.


சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில்    சில நேரங்களில் இவர் விழித்துள்ளதுடன் அவ்வேளையில் அனைத்தையும், அனைவரையும் மறந்திருந்த சோகமும் இடம்பெற்றுள்ளது.


பின்னர்   கொழும்பு வைத்தியசாலையில் பெரிய சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொண்டும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இவருக்காக துஆ செய்யுமாறு குடும்பத்தினரும் ஊர் மக்களும் கேட்டுக் கொண்டனர். இந்நிலைய்லேயே இன்று காலை இவர் சிகிச்சை பலனின்றி வபாத்தாகி உள்ளார்.

இவர் படிப்பில் முதலிடம் பெறும் மாணவன் எனவும், விளையாட்டிலும் சாம்பியனாக வருபவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



சிலாபம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம்.
ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல் : இஷ்ரப் ahd
SAD NEWS : சக மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளான மொஹமட் பைசுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். SAD NEWS : சக மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளான மொஹமட் பைசுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Reviewed by Madawala News on June 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.