பாடசாலை மாணவன் மொஹமட் பைசுல் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கோமா மற்றும் கவலைக்கிடமான நிலையில்..


சிலாபத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் இடம் பெற்ற மோதலில்
பாடசாலை மாணவத் தலைவன் ஆபத்தான நிலையில் கொழும்பு  தேசிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பிரதேசத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது .


சவறான பிரதேசத்தை சேர்ந்த மெஹமட் ரிஸ்வி மொஹமட் பைசுல் என்ற 16 வயது மாணவனே இவ்வாறு தாக்குதளுக்கு உள்ளாகியுள்ளளர்


பாடசாலை மாணவர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் சிலாபம் சவரான பாடசாலையின் மாணவன் ஒருவர் கடும் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 கடந்த 15 ஆம் திகதி இரவு 10 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது


நேற்று மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் குறித்த மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர் கோமா நிலைக்கும் சென்றுள்ளார்.


மேலும் ஆரம்பத்தில் சில நேரங்களில் இவர் விழித்துள்ளதுடன் அவ்வேளையில் அனைத்தையும், அனைவரையும் மறந்திருந்த சோகமும் இடம்பெற்றுள்ளது.


தற்போது கொழும்பு வைத்தியசாலையில் பெரிய சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொண்டும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இவருக்காக துஆ செய்யுமாறு குடும்பத்தினரும் ஊர் மக்களும் கேட்டுக்கொள்கின்றனர்.


 சம்பவம் தொடர்பில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்


சிலாபம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் : இஷ்ரப் ahd
பாடசாலை மாணவன் மொஹமட் பைசுல் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கோமா மற்றும் கவலைக்கிடமான நிலையில்.. பாடசாலை மாணவன் மொஹமட் பைசுல் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கோமா மற்றும் கவலைக்கிடமான நிலையில்.. Reviewed by nafees on June 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.