ஞானசார தேரரை சிறையில் அடைத்து எமது பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது

ஞானசார தேரரை சிறையில் அடைத்து எமது பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது என மாகல்கந்தே
சுதந்த தேரர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் இராணுவ வீரர்களுக்கு எதிரான முன்னெடுத்த அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்பட்டமைக்கு ஞானசார தேரருக்கு கிடைத்த பரிசு இச் சிறைதண்டனை ஆகும். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கவனத்தில் கொள்ளவில்லை என்றால் ஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்கி போராட தயாராக உள்ளதாக பொது பல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 
ஹோமாகம நீதவான் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகால் கந்த சுகத தேரர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 
பௌத்த பிக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்படும் வரை எமது போராட்டத்தை நிறுதப்போவதில்லை. ஞனசார தேரர் கைது செய்யப்பட்டிருந்தாலும், எதிர் காலத்தில் அவர் இல்லாமல் போனாலும் அவரது குரல் என்றும் ஓயப்போவதில்லை.
பௌத்த பிக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை எமது போராட்டம் ஓயப்போவதில்லை. அதே வேலை இன்று முதல் புதிய வகையில் எமக்கான நீதிக்காக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். 
 இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே கடந்த தேர்தலில் இந்த அரசாங்கம் பாரிய தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அது மாத்திரமல்ல எதிர்வரும் தேர்தலிலும் இந்த அரசாங்கம் தோல்வியையே சந்திக்கும் என்பதில் மாற்றம் இவ்லை. 
ஞனசார தேரர் விரைவில் விடுதலை செய்யப்படுவார். அதற்காக எந்த மட்டத்திலும் சென்று போராட நாம் தயாராகவுள்ளோம். எவ்வாறிருப்பினும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் பற்றி பேசுவதை நிறுத்தப்போவதுமில்லை. அதனை யாராலும் நிறுத்தவும் முடியாது. 
ஞானசார தேரரை சிறையில் அடைத்து எமது பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது ஞானசார தேரரை சிறையில் அடைத்து எமது பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.