அக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீது தாக்குதல்....அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச்
சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது சற்றுநேரத்திற்கு முன்னர் ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் தூண்டுதலில் பேரில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் மோட்டார் பைசிக்கிள்களும் நாசப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழர்களிடமிருந்து முஸ்லிம் காணி வாங்கக் கூடாது, மீறி வாங்கினால் கொலையும் கெய்வோம் எனவும் அச்சுறுத்தல் மேகொள்ளப்பட்டே இவ்வினவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

பொலிசார் ஸ்தலத்திற்கு சென்றுள்ளனர். இது தொடர்பாக ஏலவே ஒரு தடவையும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலே, இன்றைய இத்தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வந்தவர்கள் கறுப்பு சீலையால் முகத்தை மூடிக்கொண்டு வந்து திட்டமிட்ட வகையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிந்திய தகவல்கள் பின்னர் பரிமாறப்படும்.
  
தாக்குதலில் காயப்பட்டோர் விபரம் 
 1) சமீம் - உரிமையாளர்
 2) ஜம்சீத் அலி (பிறண்டர்ஸ்)
 3) மும்தாஸ் (கொங்கிறீட் கட்டார்)
 4) நிசாம் (குயில் மாமா)
 5) றிக்காஸ் (நசுஹூவின் மகன்)
 6) ஹிப்பதுல் கரீம் (சியாம்)

தகவல் - முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் முகநூலில் இருந்து ..


அக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீது தாக்குதல்....  அக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீது  தாக்குதல்.... Reviewed by Madawala News on June 18, 2018 Rating: 5