வறுமையை இல்லாதொழித்து சகலருக்கும் அனுகூலங்களை பெற்றுத்தரும் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றது



நீண்ட கால திட்டங்களினூடாக முறையான அபிவிருத்திக்கு வித்திடும், மக்களின் வறுமையை
இல்லாதொழிக்கும் சகலருக்கும் அனுகூலங்களை பெற்றுத்தரும் அபிவிருத்தி செயற்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என;று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்த அபிவிருத்தி திட்டங்கள் ஒரு சாராருக்கு மாத்திரம் நன்மைகளை வழங்கும் வகையில் அமையாது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் இதயத் துடிப்பையும் உணர்ந்த சகல மக்களின் அபிமானத்துடன் வளர்ச்சியடைந்த ஒரு தேசமாக உலகளாவிய ரீதியில் முன்னேற்றம் அடைவதற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களாகும் என;றும் ஜனாதிபதி கூறினார்.

இன்று (24) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை தொகுதி அமைப்பினை ஸ்தாபிக்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராம சக்தி மக்கள் இயக்கம் சிறந்தவொரு செயற்திட்டமாக தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி கிராம அபிவிருத்தியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் கிராமிய புரட்சி செயற்திட்டமும் வெகுவிரைவில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

நாட்டிலுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதற்கான புதிய கடன் திட்டமொன்றினை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதனூடாக வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் அதேவேளை உள்நாட்டு உற்பத்தி துறையில் உத்வேகமும் ஏற்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேசிய பொருளாதார சபையினூடாக நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் தொடர்பாக விரிவான கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி தேசிய உற்பத்திகளுக்கு கூடிய பெறுமதியை பெற்றுக்கொடுத்தலே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என தெரிவித்தார்.

உள்நாட்டு பழ உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அத்திட்டம் அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழங்களுக்கு அதிக பெறுமதியை பெற்றுக் கொடுப்பதற்காக விவசாய திணைக்களத்தினாலும் அத்துறைசார் நிபுணர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெயரிடப்படும் பழ மரங்களை அனுமதி பத்திரமின்றி வெட்டுவதை தடைசெய்யும் திட்டமொன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
வறுமையை இல்லாதொழித்து சகலருக்கும் அனுகூலங்களை பெற்றுத்தரும் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றது வறுமையை இல்லாதொழித்து சகலருக்கும் அனுகூலங்களை பெற்றுத்தரும் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றது Reviewed by Madawala News on June 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.