அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை தூற்றுதல் அறிவுடமையாகாது !



மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
தற்பொழுது சூடு பிடித்திருக்கும் ஷவ்வால் தலைப் பிறை விவகாரம் காரணமாக
அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளமை கவலை தரும் விடயமாகும் எமது நாட்டிலுள்ள பல்வேறு சிந்தனைப் போக்குகளையும் கொண்ட உலமாக்களுடைய அமைப்பு என்ற வகையிலும் கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு குறை நிறைகளுக்கு மத்தியிலும் முஸ்லிம் சிவில் சமூகத்தை பல்வேறு தளங்களிலும் பிரதிநிதித் துவப் படுத்தியும் தம்மாலியன்ற சேவைகளை செய்து வந்துள்ள முன்னணி என்ற வகையிலும் ஜம்மியாய்து உலமாவை காரசாரமாக பொதுத் தளங்களில் தூற்றுவது இந்நாட்டு முஸ்லிம்களிற்கு அறிவுடமையாகாது.

எந்தவொரு சமூக அமைப்பும் சமூக தொண்டனும் விமர்சனங்களிற்கு அப்பால் இருக்க முடியாது என்ற வகையில் அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமாவின் ஏதேனும் ஒருசில முடிவுகளை விமர்சிக்க நேரிடின் ஜம்மியாஹ்வினதும் சமூகத்தினதும் நன்மைகளை மாத்திரம் மனதில் கொண்டு மிகவும் நிதானமாக நமது சொந்த பெற்றோர்களை ஆசான்களை அணுகுவது போன்று அணுகுவதே அறிவுபூர்வமான முறையாகும் ஏனெனில் அவர்களில் உலமாக்களின் அந்தஸ்து கண்ணியம் என்பவற்றை ஒரேயடியாக கேள்விக்கு உற்படுத்துவது பாமார மக்களை மென்மேலும் குழப்ப நிலைக்கு இட்டுச் செல்வதோடு சமுதாய கட்டுக் கோப்பிலும் பாரிய கீறல்கள் விழுவதற்கும் அவற்றை பிழையான தரப்புக்கள் தமக்குச் சாதகமாக பயன் படுத்திக் கொள்வதற்கும் இடமிருக்கிறது.

ஏதேனும் ஒரு பிரச்சினை எழும் பொழுது குறிப்பிட்ட பிரச்சினை குறித்து மாத்திரமே நாம் பேசவும் பழகிக் கொள்ள வேண்டும் தற்பொழுது எழுந்திருப்பது சவால் பிறை குறித்த ஒரு சர்ச்சை அதை விடுத்து ஜம்மியஹ்வின் தலைவர்கள் உறுப்பினர்கள் குறித்த தனிப்பட்ட விமர்சனங்கள்இ கடந்த கால ஜம்மியஹ்வின் அரசியல் நிலைப்பாடுகள் அங்கு மேலாண்மை செலுத்தும் இயக்க சார்புகள்  ஜம்மியஹ்வின் ஒருசிலரின் அல்லது பிரிவினரின் தவறான நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் கூச்சலிட்டு கூக்குரலிட்டு குழப்ப நிலையை ஏற்படுத்துவது இஸ்லாமிய அகீதாவில் பாரதூரமான முரண்பாடுகளினைக் கொண்டுள்ள ஜம்மியாஹ்வை கருவறுக்க காத்திருக்கின்ற சக்திகளிற்கும் முஸ்லிம் விரோத சக்திகளிற்கும் களமமைத்துக் கொடுக்கிற நிலைமையை மாத்திரமே ஏற்படுத்தும்.

இப்பொழுது அதிகம் பேசப் படுகின்ற பிறை விவகாரம் இன்று நேற்று பேசப்படும் இங்கு மட்டும் பேசப்படும் விவகாரமல்ல அது எமது உயிரிலும் மேலான தலைவர் அதிஉத்தம இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து சஹாபாக்கள் தாபியீன்கள் முதல் இன்றுவரை உலகின் பல பாகங்களிலும் நிலவி வருகின்ற ஒரு விடயமாகும்.

இன்றும் உலகில் வெற்றுக் கண்ணால் அந்தந்த தேசங்களில் பிறை பார்த்தல்இ பிராந்தியத்தில் பார்த்தல் சர்வதேச பிறை பார்த்தல் வானசாஸ்திர கணிப்பீட்டில் பிறை காணல் வானியல் அவதான நிலையங்களின் துணையுடன் பார்த்தல் என பல நிலைப்பாடுகள் இருக்கவே செய்கின்றன உலகளாவிய அளவில் இயன்றவரை வேறுபாடுகள் களைந்து ஒருமுகமான முடிவுகளை எடுப்பதற்கு பல்வேறு நகர்வுகளும் மாநாடுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதை எழுதிக் கொண்டிருக்கின்ற நானும் இந்த விவகாரம் குறித்த எனது ஆய்வை எழுதியுமிருக்கின்றேன்இ நாம் எல்லோருமாக ஒரு பிரச்சினையை விவகாரத்தை அணுகும் பொழுது எமது உயரிய இஸ்லாமிய இலக்குகளை மறந்துவிட்டு அவற்றை அணுக முடியாது அத்தகைய அணுகுமுறைகள் எம்மை மென்மேலும் ஒற்றுமைப் படுத்துதல் வேண்டும்இ அங்கு சகோதரத்துவ வாஞ்சை இருத்தல் வேண்டும்இ பியார்ச்சினைகளை தீர்ப்பதற்கு தலைமைகளிற்கு சம்பந்தப் பட்ட தரப்புக்களிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாய் இருத்தல் வேண்டும் மாறாக பிளவுகளையும் பிணக்குகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துகிற காரசாரமான தூற்றுத்லகளாக விமர்சனங்கள் அமைந்து விடக் கூடாது.

அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமாவின் நிலைப்பாட்டை அதன் தலைவர் ரிஸ்வி முப்தி கூறும் பொழுது ரமழான் பிறை காணும் பொழுதே சவால் பிறையை காணுகிற திகதி நிர்ணயிக்கப் பட்டு விட்டதாக அதாவது எதிர்வரும் வெள்ளிக் கிழமை (நாளை) 15 ஆம் திகதி பிரைக்குழு கூடுவதாகவும் அவர் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சில வானியல் அறிஞர்களின் கூற்றுப் படி 14 ஆம் திகதி (இன்று) வியாழக் கிழமை பிறை நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தென்பட்டதாக உறுதிப் படுத்தப் பட்டால் வெள்ளிக் கிழமை பெருநாள் கொண்டாடுவது கட்டாயமாகிறது நோன்பு பிடித்தல் ஹராமாகிறது எனவே ரமழானில் குறைவடையும் ஒரு நோன்பை காலம் தாழ்த்தாது கழா செய்து கொள்வோம் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்இ அவர் ஏற்கனவே பெரிய பள்ளியில் முஸ்லிம் விவகார திணைக்களத்துடன் இணைந்து எடுக்கப் பட்ட முடிவிற்கு முரணாக எந்தக் கூற்றையும் சொல்லவில்லைஇ பெரிய பள்ளியும் ஜம்மியாஹ்வும் வெவ்வேறு நிலைப் பாடுகளை எடுக்கவுமில்லை என்பதுவே உண்மையாகும்.

அவர்கள் கூட்டாக எடுத்த முடிவிற்கு மாற்றமாக (இன்று) வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிரைக்குழு கூடுமேன்றோ நாடளாவிய பியரைக் குழுக்கள் கூடுவர் என்றோ ஜம்மியாஹ் அறிவிக்கவுமில்லைஇ இந்த நிலையில் பெரிய பள்ளிவாயல் பேச்சாளர் பிரிக் குழுத் தலைவர் விடுத்த அறிக்கைக்குப் பிறகு ஒரு முரண்பாடு இருப்பது போன்ற தப்பபிபிராயமே நிலவுகின்றது.

ஆலிம்கள் என்ற வகையில் அவ்வாறான ஒரு நிலை ஏற்படின் முஸ்லிம்களை பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கச் சொல்வது ஹராமாகும் என்பதனையே அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார் இது அவரது தனிப்பட்ட சொந்த முடிவல்ல என்பதனையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் பிறை குறித்த வெவ்வேறு நிலைப்படுகளிக் கொண்ட அமைப்புக்களும் உலமாக்களும் ஜம்மியஹ்வில் இருக்கின்ற நிலையில் அவர்களது ஹிலால் குழுவினர் கூடியே இந்த முடிவினை எடுத்துள்ளார்கள்.

ஆனால் பிறை தென்படும் வாய்ப்புக்கள் இருப்பதனை வானியல் அவதான நிலையங்கள் அறிஞர்கள் தெரிவித்திருந்தால் காணும் பிறையை யாரிடம் தெரிவிப்பதென்ற  கேள்வியே மக்களை குழப்ப நிலையில் வைத்துள்ளதை உணர முடிகிறதுஇ இவ்வாறான விதிவிலக்கான ஒரு நிலையில் ஹிலால் கமிட்டியினர் இன்றும் கூடுவதும் வழமையான தொலைபேசி எண்களை வழங்குவதும் நாடு முழுவதும் சாட்சிகளை ஏற்கும் குழுக்களை இயங்கச் செய்வதும் பிரச்சினைக்கு ஒரு உடனடி தீர்வாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் மிகவும் தீர்க்கமான ஒரு களத்தில் தற்பொழுது எழுந்துள்ள சர்ச்சையை சாதகமாக பயன்படுத்தி சமூகத்தினது நன்மைகருதி எல்லோரும் இதய சுத்தியுடன் எதிர்காலத்தில் மேற்படி தலைப் பிறை  விவகாரத்தில் இன்னும் முன்னேற்றகரமான தீர்வுகளை எய்த திட சங்கற்பம் பூணுவோம்இ இன்ஷா ஆல்லாஹ் அதுவரை அல்லாஹ்விற்காக பொறுமை காத்து சமூக கட்டுக் கோப்புகளைப் பேணி எதிர்வரும் ஈதுல் பித்ர் பெருநாளை சகோதர வாஞ்சையுடன் வேற்றுமை களைந்து நாம் கொண்டாடுவோம் கருத்து வேறுபாடுள்ள தரப்புக்கள் வழமைபோல் நாளையோ நாளை மறுநாளோ பெருநாளை அமைதியாக அனுஷ்டிப்பதே நாம் இஸ்லாத்திற்கும் முச்ளிம்களிற்கும் செய்ய முடியுமான மிகப் பெரிய சேவையாகும்.

எல்லா நிலைமைகளிலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பயந்து கொள்வோம்!
இந்தப் புனித ரமழான் சுமந்துவந்த அனைத்து அருள் பாக்கியங்களையும் நிறைவாக அடைந்து கொண்ட நல்லடியார்களாக எல்லாம் வல்ல அல்லாஹ் என்னையும் உங்களையும் எங்கள் பெற்றார் உடன்பிறப்புக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அன்பிற்குரியவர்கள் அனைவர்களையும் அங்கீகரித்து அருள் புரிவானாக !

உலகெங்கும் ஈதுல் பிதர் பெருநாளை கொண்டாடும் எல்லா உறவுகளிற்கும் எனது பிரார்த்தனைகளை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்இ எல்லாம் வல்ல அல்லாஹ் எமது சாலிஹான நல அமல்களை அங்கீகரித்து அருள் புரிவானாக! பூரண உடல் உலா ஆரோக்கியத்துடன் இனிவரும் ரமழான்களையும் ஈதுகளையும் அடையப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை தூற்றுதல் அறிவுடமையாகாது !  அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை தூற்றுதல் அறிவுடமையாகாது ! Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.