நடு வீதி வரை வந்துள்ள பொத்துவில் பஸ் நிலையம்: பயணிகள் விசனம்.


(சியாத் அகமட் லெப்பை)
பொத்துவில் பிரதேசத்திற்குற்பட்ட பிரதான வீதியில் அமைந்திருக்கும் பேரூந்து நிலையம்
சரியானதொரு நிலையமின்றி  காணப்படுவதோடு வாகன நெரிசல்களினால் நடு வீதி வரைக்கும் சென்று கொண்டிருப்பது பயணிகளுக்கு இடையூறுகின்றது என பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

குறித்த பேருந்து நிலையமானது மறைந்த முன்னால் பாராளுமன்ற உரிப்பினர் எம்.சீ.கணகரட்னம் அவர்களின் காலத்தில் பொத்துவிலின் பஸ் நிலையத்திற்காக அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து  சிறிய இடம் ஒன்றை பயணிகளின் நலன் கருதி பேருந்துகள் நிறுத்துவதற்காக நன்கொடையாக வழங்கியிருந்தார் என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 குறித்த பொத்துவில் பேருந்து நிலையமானது இன்று வரைக்கும் எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறாது  அபிவிருத்தியில் அனாதரவற்ற நிலையில் இருந்துகொண்டிருப்பதையே காணக் கூடியதாக இருக்கிறது என மக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொழும்பு, மொனராகலை, அழுத்கம, காலி, பாணமை, அக்கரைப்பற்று, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கண்டி, திருக்கோணமலை என நாட்டின் இன்னும் பல பகுதிகளுக்கு செல்வதற்காக தரிக்கப்படுகின்ற இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேரூந்து மற்றும்  தனியார் போக்குவரத்து பேரூந்துகளும் பல நெரிசல்களுக்கு மத்தியில் நிலையம் என்றிருக்கும் தரிப்பிடத்தில் தரிக்கப்படுகின்றன தரிக்கும் சந்தர்ப்பத்தில் நடு வீதி வரை பேருந்து தரித்துக்கொள்வதானது வீதி வரை செல்கின்றது இது பாதசாரிகளுக்கும் போக்குவரத்துக்கு பயணிகளுக்கும் இடையூறுகின்றது.

இதனால் பொத்துவில் பிரதான வீதியினூடக செல்கின்ற பயணிகள் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்குள்ளாகின்றனர், நோயாளிகள் மற்றும் அவசரத்தேவையுடையவர்களின் பயணத்திற்கு இடையூறாக குறித்த பஸ்தரிப்பிடம் காணப்படுகின்றது.

பல நாடுகளிலிருந்து சுற்றுலாவுக்கு செல்லும் இலங்கையின்  ஓர் பகுதியாகவே பொத்துவில் அறுகம்பை பிரதேசம்  காணப்படுகின்றது அது மட்டுமல்லாமல்  இலங்கைக்கு சுற்றுலாத்துறைக்கு அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் பகுதியாகவே பொத்துவில் அறுகம்பை இடம்பிடித்திருக்கிறது. அவ்வாறு இருக்கும் இப்பகுதியில் ஓர் பஸ் நிலையம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை  இந்த அரசும் அரசியல்வாதிகளும் சிந்திக்க ஏன் மறுக்கின்றனர் என்பதுதான் இதுவரை புரியாத ஓர் புதிராகவே இருந்து வருகின்றது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 மேலும் பஸ்களுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இடமானது பாலடைந்த வீடுபோன்று சுத்தமற்ற நிலையில் காணக் கூடியதாகவே இருக்கின்றது, இதனால் பயணிகள் உட்கார்ந்திருப்பதற்கு கூட அங்கு சரியான காத்திருப்பிடமும் இல்லை என  வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தொடக்கம் உள்நாட்டு பயணிகள் மற்றும் பிரதேசவாதிகள் வரை கவலை  தெரிவிக்கின்றனர்.

இவை போன்று  பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் மலசலகூடங்கள் கூட நிலையான பயண்பாட்டில் இல்லை  சில சந்தர்ப்பங்களில் இரவு நேரங்களில் அடைக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றது இதனால் போரூந்துக்காக காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள், கற்பினித்தாய்மார்கள், முதியோர்கள், சிறியோர்கள்,அரச அதிகாரிகள், பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் என தரிப்பிடத்தில் காத்திருக்கும் அனைத்துப் பயணிகளும் பல அசௌகரியங்களுக்குள்ளாகின்றனர்,

 இவ்வாறு முச்சக்கரவண்டி நிருத்தி வைக்கும் இடங்களும் போதாமையினால்  கடைகளுக்கு முன்னாடியும், பஸ் நிலையத்தை சுற்றியும் முச்சக்கர வண்டிகள் தரித்து நிருத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான ஓர் நிலவரத்தையும் காணக்கூடியதாக இருக்கின்றது இதனால் இன்னும் இன்னும் பயணிகளும் பாதசாரிகளும் அசௌகரியங்களுக்குள்ளாகின்றனர்.

இது சம்மந்தமாக எந்தவொரு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் குறித்த போக்குவரத்திற்கான அமைச்சும் பொத்துவில் பேருந்து நிலையத்தை கவனத்திற்கொள்ளாமல் இருப்பது பெறும் கவலைக்குறிய விடயமாகும் என பிரதேசவாதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

 தேர்தல் காலங்களில் மட்டுமே மேற் குறிப்பிட்ட அரசியல்வாதிகள் அமைச்சர்கள் தலைவர்களைக் காண்கின்றோமே தவிர தேர்தல் முடிந்தவுடன்  ஈ கூட ஆடாத நிலையிலேயே பொத்துவில் பிரதேசம் அனாதரவற்ற நிலையில் இருந்து கொண்டு வருகின்றது. அவர்களின் அரசியல் இலாபத்திற்கே காலத்துக்கு காலம் மக்களிடம் பொய் வாக்குறிதிகளை வழங்கி கட்சி விட்டு கட்சிகள் மாறி மாறி பல அரசியல் கட்சியில் தாவிக்கொண்டே தேர்தல் காலங்களில் மட்டும் வருகின்றனர். பொத்துவில் ஊர் சம்மந்தாமான  சேவைகள், அபிவிருத்திகள் என்று வரும் போது பொத்துவில் எல்லை முடிவுகளான சங்கமங்கண்டிக்கும், லாகுகலைக்கும் அந்தப் பக்கத்துடனயே முடிவுறுகின்றதே தவிர பொத்துவிலுக்குள் அவைகள் வருவதென்பது புதுமையாகவே இருக்கின்றது இது வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற துரோகமும்,ஏமாற்றமுமாகும் என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இத்தனை ஆண்டுகளும் அப்பகுதி மக்களுக்கு சிலர் பொய்யான வாக்குறிதிகளை வீசி மக்களின் வாக்குகளினால் வெற்றிமாலை சூடியவர்கள்   மக்களின் தேவைகளை கண்டரிந்து நிவர்த்தி செய்யுமாறு பிரதேச மக்கள்  கேட்டுக் கொள்கின்றேன்.

 எனவே கட்சி வேதம் பாராது அனைத்து கட்சிகளும் சேர்ந்து சிறந்த பேருந்து நிலையம்  இல்லாத எமது ஊருக்கு சரியான நிரந்தர நிலையத்தை பெற்றுத்தருமாறு   பிரதேச மக்கள் தொடக்கம் பயணிகள் வரை கேட்டுக் கொள்வதோடு தங்களது அழுத்தங்களையும் தெரிவிக்கின்றனர்.
நடு வீதி வரை வந்துள்ள பொத்துவில் பஸ் நிலையம்: பயணிகள் விசனம். நடு வீதி வரை வந்துள்ள  பொத்துவில் பஸ் நிலையம்: பயணிகள் விசனம். Reviewed by Madawala News on June 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.