பாடப் புத்தகங்களில் மறைந்து மறந்து போகும் சிறுபான்மை வரலாறு!




"வரலாற்றை இறைவன் மாற்ற மாட்டான்; மனிதன் வரலாற்றை மாற்றிவிடுவான்" என்ற ஒரு அறிஞரின்
கூற்றுக்கினங்க இலங்கை தேசத்து சோனகர்களின் வரலாற்று குறிப்புகள்,நிகழ்வுகள்,அர்ப்பணங்கள் தினமும் அமைதியாக மரணித்துக் கொண்டிருக்கின்றன.உணர,உணர்த்த வேண்டிய தேவையுள்ளது.

இந்த நாடு ஒரு இனத்தின் வியர்வை, இரத்தத்தின் மூலம் கட்டியெழுப்பட்டுள்ளதாகவே அறிவூட்டப்படும்?ஓர் அநியாயம் அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இதன் ஆபத்து ஆழ,அகலம் கூடியதாக இருக்கும்.

பாடசாலைக் கல்வியில் முக்கிய பாடங்களில் ஒன்றான வரலாறுப்பாடம்  தரம் 6-11வரை கற்பிக்கப்படுகிறது. அவற்றின் உள்ளடக்கங்களை வாசிப்புச் செய்தால் முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு எந்தப் பங்களிப்பு செய்யாதவர்களோ?! என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

புரிந்துணர்வு, இன ஐக்கியம் (அவரவர் மத,இன தனித்துவம் பேணி) என்பவற்றை எதிர்கால சந்ததியினரிடத்தில் உருவாக்கும் கருவி பாடசாலைக் கலைத்திட்டமாகும். இதில் ஒரு இனத்தினது வரலாற்றை அதி உச்ச முன்னுரிமை வழங்கி,அடுத்த இரு சிறுபான்மைகளான தழிழ், முஸ்லிம்கள் இந்த தேசத்திற்கு அர்ப்பணிப்புகள்,பங்களிப்பு செய்யாதவர்கள் என்ற எண்ணத்தை விதைப்பதற்கான தூண்டுதல் காரணியோ என்ற ஐயம் எழுகிறது.

தழிழளர்களின் வரலாறு பாடப்புத்தகங்களில் இணைக்கப்பட வில்லை என்ற குற்றச் சாட்டை சில மாதங்களுக்கு முன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வடமாகாண முதலமைச்சரும்,ஒய்வுநிலை உயர் நீதிமன்ற நீதியரசர் C.விக்னேஸ்வரா குறிப்பிட்டிருந்தார்.ஆனால், எமது அரசியல்வாதிகளோ,கல்விப் புலத்தில் உள்ளவர்களே இது தொடர்பாக காத்திரமான கருத்தாடல்களையேனும் செய்தார்களா?! என்பதை நான் அறிய மாட்டேன்.

தரம் 11 வரலாற்று புத்தகத்தில் இரு முஸ்லிம் நபர்களான TB ஜாயா, சித்தி லெப்பையின் சில குறிப்புகளோடு மாத்திரம் இலங்கை சோனக வரலாறு வரையறுக்கப்பட்டுள்ளது. "சகவாழ்வு" ஏற்படுத்த பல கோடிகள் கொட்டப்படும் இந்த நாட்டில் கல்வித் திட்டத்தின் வரலாற்றுப் பாடத்தில் முஸ்லிம்களின் தியாக,பங்களிப்பு வரலாறு நியாயமான அளவு சேர்க்கப்பட வேண்டும். அவ்வாறாயின் நாட்டின் இனவாத கருத்துக்களையும் செயற்பாடுகளையும் அடுத்த தலைமுறையினரிட்டத்தில் ஓரளவேனும் குறைக்கலாம்.

மொத்தப் பாட அலகுகளில் குறைந்தது 10% ஆவது ஒவ்வொரு தரத்திற்கும் முஸ்லிம்களது வரலாற்றுப் பங்களிப்பு பற்றி  சேர்க்கப்பட வேண்டும் என்பதை தேசிய கல்வி ஆனைக்குழு (NEC),
கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம்(NIE) போன்றவைகளுக்கு அறிவுறுத்தல், அழுத்தங்களை வழங்க சமூகத்தின் தகுந்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

நாட்டில் பங்கு கேட்க வரவில்லை; 
நாமும் பங்காளிகலாக இருந்தோம் என்பதை ஞாபகப்படுத்தும் படியே கோருகிறோம்.

Ashs heikh A Raheem Akbar 
Madawala
2018.06.20
பாடப் புத்தகங்களில் மறைந்து மறந்து போகும் சிறுபான்மை வரலாறு!  பாடப் புத்தகங்களில் மறைந்து மறந்து போகும் சிறுபான்மை வரலாறு! Reviewed by Madawala News on June 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.