திஹாரியில் இன்று பிறை கண்டோம்... இரண்டு பெண்கள் என்பதால் மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்ல்லை.


அஸ்ஸலாமு அலைக்கும் திஹாரியில்  இன்று நானும் எனது சகோதரனின் மனைவியும் நோன்பு திறக்கும்
முன்னே வீட்டின் மாடிக்கு சென்று பிறை பார்க்க தயாராக இருந்தோம் நோன்பு திறந்து பத்து பதினைந்து நிமிடங்கள்  பார்த்தவண்ணமே இருந்தோம் பின்பு சரியாக 6:47 மணி அளவில் பிறையை அல்ஹம்துலில்லா நாம் கண்டோம் .

பின் பலரையும் அழைத்து காட்டுவதற்காக அழைத்தோம் அவர்கள் வரும்போது சுமார் ஒரு நிமிடம் அளவில் பிறை மறைந்து விட்டது நாட்டில் பலரும் காண்பார்கள் என்ற நோக்கில் நான் சுற்றிலும் உள்ளவர்களிடம் கூறி மௌனமாக இருந்து விட்டேன்.

 அப்போது நாளை நோன்பு நோற்க வேண்டும் என்று உலமா சபை கூறியதை கேட்டதும் நான் கண்டதை கூறாவிட்டால் ஒரு பாவம் நிகழும் என்ற அச்சத்தில் மேலிடத்துக்கு அறிவித்தேன்.

 அப்போது அவர்கள் இரண்டு பெண்கள் கண்டவர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஏற்றுக்கொள்ளவில்லை.

 இது எனக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது அப்போது அவர்களிடம் நான் ஒரு விடயத்தை முன்வைத்தேன் இது மாதிரியான விடயங்கள் இனிமேலும் நிகழாமல் இருக்க வேண்டுமானால் தயவுசெய்து வானொலி மூலமாக பிறை பார்க்கும் சட்டதிட்டம் ஒழுங்குமுறை அனைத்தையும் இனிமேலாவது பூரண விளக்கத்துடன் மக்களுக்கு கூறுவது முக்கியமான ஒன்றாகும்.

 அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இதற்கான பதில் என்னவென்று என்னால் கூற முடியாது நீங்களே முடிவெடுத்துக் கொள்ளவும் வஸ்ஸலாம் அல்லாஹ் மிகவும் அறிந்தவன் .

-நான்  விதாத் அத்னான்  - நம்புலுவாவ  சுல்பிகா மவ்லவி அவர்களின் புதல்வி 

(இச்சம்பவம் தொடர்பில் எமது செய்திச் சேவையிடம் உறுதி செய்தார்)
திஹாரியில் இன்று பிறை கண்டோம்... இரண்டு பெண்கள் என்பதால் மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்ல்லை. திஹாரியில் இன்று பிறை கண்டோம்... இரண்டு பெண்கள்  என்பதால்  மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்ல்லை. Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.