அக்குறணை பிரதேசங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு 32 இலட்சம் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டது.


( மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு தமது பிரதேசங்களில் அபிவிருத்தி பணிகளை
முன்னெடுப்பதற்கு  32 இலட்சத்தி  ஐம்பது ஆயிரம் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர்  இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.



இன்று 21 ம் திகதி அலவத்துகொடையில் அமைந்துள்ள அக்குறணை பிரதேச சபையில் இடம் பெற்ற அதன் மாதாந்த பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.


இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையின் உறுப்பினர்கள்  தமது பிரதேசங்களுக்கு ஏதேனும் அபிவிருத்திதி திட்டங்களை முன்னெடுக்க ஆசைப் படுவதுடன்  மக்களும் அதனை எதிர்பார்க்கின்றனர்.


 ஆகவே எமது சபைக்கு ஏற்றவாறு ஒரு தொகை பணத்தை ஒதுக்கி உள்ளதாகவும. தலைவருக்கு இரண்டரை இலட்சம் ரூபாவும், உப தலைவர்  மற்றும் எதிர் கட்சி தலைவர் ஆகியோருக்கு ஒன்றரை இலட்சம் ரூபா வீதமும்  ஏனைய உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய வீதமும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


அக்குறணை பிரதேச சபையின் 30 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன் அதன் தவிசாலருக்கும் உதவி தவிசாலருக்கும் எதிர் கட்சி  லைவருக்கும் ஐந்தரை இலட்சம் ரூபா ஒதுக்கபடுவதுடன். மற்றை 27 உறுப்பினர்களுக்கும் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம்  27   இலட்சம்  ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


2018 06 21 ஆஸிக்

அக்குறணை பிரதேசங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு 32 இலட்சம் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டது. அக்குறணை பிரதேசங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு  32 இலட்சம் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டது. Reviewed by Madawala News on June 21, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.