(வீடியோ இணைப்பு) இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள சுப்பர் கார்... லம்போகினியை மிஞ்சிய தொழில்நுட்பம்.


உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற லம்போகினி காரை மிஞ்சும் (400 Php) அளவுக்கு இலங்கையில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு மருதானை ட்ரிபோலி மாக்கட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

அத்துடன் இலங்கைக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் திறனை அபிவிருத்தி செய்யும் இடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் மருதானையில் ஆரம்பித்த வேகா இனோவேஷன்ஸ் நிறுவனம் உள்ளுர் தயாரிப்பில் கார் ஒன்றை தாயாரிக்கும் நடவடிக்கைகைள ஆரம்பித்தது.

2014ஆம் ஆண்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது மோட்டார் கார் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

முழுமையாக இலங்கையர்களின் திறமை மற்றும் அறிவினை கொண்டு தயாரிக்கப்படும் கார், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியலார்கள் உட்பட உள்ளூர் பொறியியலாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த கார் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் மருதானை ட்ரிபோலி மாக்கட் பகுதியில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
விபரம்..  http://www.vega.lk/


(வீடியோ இணைப்பு) இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள சுப்பர் கார்... லம்போகினியை மிஞ்சிய தொழில்நுட்பம். (வீடியோ இணைப்பு) இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள சுப்பர் கார்... லம்போகினியை மிஞ்சிய தொழில்நுட்பம். Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.