தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற வாழைச்சேனை மாணவி சியாமா சுஹா சிங்கப்பூர் செல்ல தெரிவு.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில்
க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி சித்தீக் சியாமா சுஹா இம்முறை தேசிய ரீதியில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல தேசிய கணித வினாடி வினாப் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்று சாதனை படைத்ததோடு சிங்கப்பூர் நாட்டுக்கு பயணமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

குறித்த மாணவி பாடசாலை ரீதியில் நடைபெறும் போட்டிகளில் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகளை வெளிக்காட்டக் கூடியவர் அந்த வகையில்தான் அண்மையில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல தேசிய கணித வினாடி வினாப் போட்டியில் கலந்து கொண்டு கூடுதலான புள்ளிகளைப்பெற்று தேசியத்தில் முதலிடம் பெற்றதோடு சிங்கப்பூர் நாட்டில் நடைபெறவுள்ள போட்டியிலும் கலந்து கொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

எனவே குறித்த மாணவி சிறந்த முறையில் இப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைப்பதற்கு அம் மாணவியை பயிற்றுவித்த கணிதாப்பாட சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஏ.எம்.மன்சூர் அவர்களுக்கும் மற்றும் சகல விதங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)
தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற வாழைச்சேனை மாணவி சியாமா சுஹா சிங்கப்பூர் செல்ல தெரிவு.  தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற வாழைச்சேனை  மாணவி சியாமா சுஹா சிங்கப்பூர் செல்ல தெரிவு. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5