பாடசாலை மாணவர்களுக்கு அநாகரிகமான வடிவில் முடி வெட்டினால் சலூனின் அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்படும். #காத்தான்குடி.

பாடசாலைகளின் ஒழுக்க விழுமியங்களைச் சீரழிக்கும் வகை யில் மாணவர்களுக்கு அநாகரிகமாக சிகை அலங் காரம் செய்யும் சிகையலங்கார நிலையங்களின் அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்படும் என காத்தான்குடி நகர முதல்வர் எஸ். எச்.எம்.அஸ்பர் அதிரடி அறிவிப் பொன்றை விடுத்துள்ளார். 


காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள சிகையலங்கார நிலைய உரிமை யாளர்கள், ஊழியர்களுடனான கலந்துரையாடல் நகர முதல்வர் தலைமையில் நகர சபை மண்டபத்தில் அண்மையில் இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் காத்தான்குடி நகர சபை முதல்வர், சிகையலங்கார நிலைய உரிமையாளர்கள் மற்றும் அதன் ஊழியர்கள்
மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போது,  பாடசாலை மாணவர்கள் மத்தியில் இதுகாலவரை கடை பிடிக்கப்பட்டு வந்த ஒழுக்க விழுமியங்களில் சிகையலங் கார மும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

மாணவர்கனின் பாடசாலை வாழ்க்கைக் காலத்தில் பாரம் பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த ஒழுக்க விழுமியங்களை அனைத்து சமூகப் பாடசா லைகளும் மதித்தொழுகின் றன.

எனவே, வெளி உலக வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் உன்னதமான பள்ளிப்பருவ காலத்தில் கடைப்பிடித் தொ ழுக வேண்டிய பாடசாலை ஒழுக்க விழுமியங்களை தாக ரிகமென்ற பெயரில் இடம் பெறும் அநாகரிக நவீன சிகை அலங்காரங்கள் இல்லாதொ ழித்து விடு கின்றன.

பாடச சலை மாணவர்கள நடை, உடை, பாவனை, பராமரிப்பு ஆகிய இன்னோரன்ன ஒழுக்க விழுமிய சிறப்பம்சங்களுடன் தயார்ப்படுத்த வேண்டி இது ஒட்டு மொத்த சமூகத்திலுள்ள அனைவரதும் பொறுப்பாகும்.


இந்த இலக்கை அடைந்து கொள்வதற்காக நாம் அனை வரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும். நாளைய சமுதா யத்தை நற்பண்புள்ளவர்களாக உரு வாக்கும் இந்த மகோன் னத பணியில் சிகையலங்கா ரிக ளும் இணைந்து கொள்ள வேண்டும்.

காத்தான்குடி நகர சபைப் பிரிவில் இந்த சமூகப் பொறுப்பை மீறும் சிகையலங் கார நிலையங்களின் அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப் படும் என்றார்,

இக்கலந்துரையாடலில் காத் தான் குடி நகர சபை உறுப்ப னர்கன், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி ஆ.எல்.நஸர் தீன் , காத்தான்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், காத்தான் குடியிலுள்ள ஆண்கள் பாடசாலைகளின் அதிபர்கன் மற்றும் அங்கு கடமையாற்றும் ஒழுக்காற்று விடயதான ஆசி சியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கு அநாகரிகமான வடிவில் முடி வெட்டினால் சலூனின் அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்படும். #காத்தான்குடி. பாடசாலை மாணவர்களுக்கு அநாகரிகமான வடிவில் முடி வெட்டினால் சலூனின் அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்படும். #காத்தான்குடி. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.