(படங்கள்) மடவளை இளைஞர் சமூக நல அமைப்பினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானப்பணி. இரவு 10 மணிவரை தொடர்ந்த வேலை.


மடவளை இளைஞர் சமூக நல அமைப்பினால் ( Madawala Youth Social Welfare Organisation) ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானப்பணி இன்று (13) மடவளை நகரில் மேற்கொள்ளப்பட்டது.

10 வருடங்களுக்கு மேலாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த வத்தேகம கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் பணியே இன்றைய தினம் நடைபெற்றது.

மடவளை இளைஞர் சமூக நல அமைப்பை சேர்ந்த 50க்கு மேற்பட்ட இளைஞர்கள் இன்றைய சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.

 காலை 10 மணியளவில் ஆரம்பமான இச்சிரமதானம் இரவு 10 மணிவரை மேற்கொள்ளப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்றை இந்நிகழ்வை சிறப்பாக செய்து முடிக்க உதவிய பாத்ததும்பர பிரதேச சபையில் தலைவர் சூட்டி அபேசிங்ஹ உற்பட ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் குறிப்பாக பிரதேச சபையின் ஊழியர்களுக்கும் மேலும் பல வழிகளில் உதவி ஒத்தாசைகளை வழங்கிய பிரதேசவாசிகள் அனைவருக்கும் மடவளை இளைஞர் சமூக நல அமைப்பு தனது மேலான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
-Hassim mohamed Naleem -


(படங்கள்) மடவளை இளைஞர் சமூக நல அமைப்பினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானப்பணி. இரவு 10 மணிவரை தொடர்ந்த வேலை. (படங்கள்) மடவளை இளைஞர் சமூக நல அமைப்பினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானப்பணி. இரவு 10 மணிவரை தொடர்ந்த வேலை. Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5