முச்சக்கர வண்டி விபத்து.. பெண் உற்பட மூவர் பலி. சாரதி காயம்.


மாத்தறை ஊருபொக்க – ரொட்டும்ப பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில்
மூன்று பேர் பலியாகினர்.

முச்சக்கர வண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பஸ்கொட, பெங்கமுவ மற்றும் ஹதுகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 50 மற்றும் 53 வயதானவர்களே ( ஒரு பெண் உட்பட) பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, எம்பிலிப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முச்சக்கர வண்டி விபத்து.. பெண் உற்பட மூவர் பலி. சாரதி காயம். முச்சக்கர வண்டி விபத்து.. பெண் உற்பட மூவர்  பலி.  சாரதி காயம். Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5