புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை புதன் மாலை : கொழும்பு பெரிய பள்ளி.


புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை  புதன் கிழமை மாலை
இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அந்த வகையில், ஹஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு  புதன் கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில, குறித்த தினத்தில் தலைப்பிறை தென்பட்டால் வியாழக்கிழமை முதலாவது நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை புதன் மாலை : கொழும்பு பெரிய பள்ளி. புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை  புதன் மாலை : கொழும்பு பெரிய பள்ளி. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5